லாரியில் நசுங்கிய செய்தியாளர் :மணல் மாபியாக்களின் வெறிச்செயல்| Dinamalar

லாரியில் நசுங்கிய செய்தியாளர் :மணல் மாபியாக்களின் வெறிச்செயல்

Added : மார் 26, 2018 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 லாரியில் நசுங்கிய செய்தியாளர்  :மணல் மாபியாக்களின் வெறிச்செயல்போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், மணல் கொள்ளை குறித்த செய்தியை சேகரித்த செய்தியாளர், லாரியில் நசுங்கி இறந்த, 'வீடியோ' அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த, சந்தீப் சர்மா, 35, 'டிவி' சேனலில் செய்தியாளராக பணிபுரிந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
சமீபத்தில், பிண்ட் மாவட்டத்தில், சந்தீப் சேகரித்த மணல் கொள்ளை குறித்த செய்தி, 'டிவி'யில் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து, மணல் கொள்ளை கும்பலிடம் இருந்து, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக, சந்தீப், போலீசாரிடம் புகார் அளித்து இருந்தார்.
அந்தப் புகார் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மணல் கொள்ளையர்களுடன், போலீசாரும் உடந்தையாக இருப்பதாக, சந்தீப் சந்தேகப்பட்டார்.

கடந்த ஞாயிறன்று வேகமாக வந்த ஒரு லாரி மோதியதில், பைக்கில் இருந்து கீழே விழுந்த சந்தீப், சக்கரத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.போக்குவரத்து நிறைந்த சாலையில் நடந்த இந்த கோர விபத்து குறித்த வீடியோ, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், பீஹார் மாநிலத்தில், நவீன் நிச்சல் மற்றும் விஜய் சிங் என்ற இரு செய்தியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகள் பயன்படுத்திய காருக்கு, பொதுமக்கள் தீ வைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
27-மார்-201814:40:41 IST Report Abuse
balakrishnan மணல் கொள்ளை இந்திய முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது, இந்த தேசிய அல்லக்கைகள் என்னமோ தமிழகத்தில் மட்டுமே நடக்குது என்று பீலாவிட்டன,
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
27-மார்-201812:46:47 IST Report Abuse
christ பல இடங்களில் குற்றவாளிகள் + போலீஸ் மாமூல் பரிவர்த்தனை அமோகமாக நடைபெறுவதால் குற்றங்கள் நடைபெறுவதை கண்டும் காணாமலும் ஆக்கப்படுகிறது
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
27-மார்-201812:25:59 IST Report Abuse
Syed Syed digitel india vin amoga valarchi idhudan.
Rate this:
Share this comment
Arsh - Frankfurt,ஜெர்மனி
27-மார்-201813:33:34 IST Report Abuse
Arshஉங்க வீட்டு குழாயில தண்ணி வராட்டியும் டிஜிட்டல் இந்தியாவ தான் குறை கூறுவீரோ...
Rate this:
Share this comment
karupanasamy - chennai,இந்தியா
27-மார்-201813:44:27 IST Report Abuse
karupanasamyஇந்தியர்களுக்காக அனுதாபம் கூட தெரிவிக்காத உங்களால் யாரையும் குறை கூற அருகதை இல்லை....
Rate this:
Share this comment
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
27-மார்-201814:09:37 IST Report Abuse
Enrum anbudanஎவனா இருந்தாலும் நாடு ரோட்டில் விட்டு கல்லால் அடிக்க வேண்டும் அதை கூறுவதை விட்டு விட்டு டிஜிட்டல் இந்தியாவாம்? என்ன புத்தி பாய் உங்களுக்கு?...
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
27-மார்-201812:09:03 IST Report Abuse
ganapati sb போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது கொடுமை மணல் கொள்ளையர்கள் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடித்து கைது செய்து அவரின் போலீஸ் கூட்டாளிகளை பதவியில் இருந்து நீக்க வேண்டும் இயற்கை வள சுரண்டலுக்கு எதிராக குரல் கொடுத்து உயிர் விட்ட செய்தியாளரின் தியாகத்திற்கு அவரின் குடும்ப குழந்தைகள் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்
Rate this:
Share this comment
balakrishnan - coimbatore,இந்தியா
27-மார்-201814:41:47 IST Report Abuse
balakrishnanஏதாவது பி.ஜெ.பி தலைவராக இருக்க வாய்ப்பு உண்டு, எங்கே வரப்போவுது நடவடிக்கை...
Rate this:
Share this comment
I love Bharatham - chennai,இந்தியா
27-மார்-201815:49:52 IST Report Abuse
I love Bharathamதுக்கத்திலும் .....தூக்கத்திலும் ....கூட ...மோடி ஏய் எதிர்க்க வேண்டும்......வேறு ஒன்றும் தெரியாது பராபரமே.......
Rate this:
Share this comment
Cancel
Soundar - Chennai,இந்தியா
27-மார்-201811:38:40 IST Report Abuse
Soundar We need a honest dictator for India or people should take law into their hands and severely punish all culprits.
Rate this:
Share this comment
Cancel
27-மார்-201811:30:11 IST Report Abuse
ديفيدرافائيل இது ஏதோ திட்டமிட்டு கொலை செய்திருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
makesh - kumbakonam ,இந்தியா
27-மார்-201810:35:18 IST Report Abuse
makesh அரசியல்வாதி கையில் நாடு சிக்கி சீரழிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
27-மார்-201808:22:12 IST Report Abuse
Srinivasan Kannaiya சமூக விரோதிகள் ஏதோ ஒரு அரசியவாதி பின்னால் நின்று கொண்டு இத்தனையும் செய்கிறான்... கேக்க நாதி இல்லை... தேர்தலின் பொழுது வாக்கு பிச்சை எடுக்கமட்டும் வந்து விடுவார்கள்...
Rate this:
Share this comment
Cancel
geena -  ( Posted via: Dinamalar Android App )
27-மார்-201807:12:29 IST Report Abuse
geena தப்பான அரசியல் தலைவர்களிடம் பாடுபட்டு பெற்ற சுதந்திரம் பத்திரிகை சுதந்திரம் எல்லாம் அடிமையாகிக் கொண்டு இருக்கிறது. தவறு செய்யும் அரசியல் வாதிகளுக்கு மீண்டும் எலக்ஷனில் சீட் கொடுக்கக் கூடாது Life long.
Rate this:
Share this comment
Cancel
27-மார்-201806:50:44 IST Report Abuse
ஆப்பு பின்னே? தொழில் செய்யுறதுக்கு தடையா இருந்தா? மோடியின் தொழில் வளர்ச்சிக் கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் இதே கதிதான்.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
27-மார்-201809:47:31 IST Report Abuse
Agni Shivaபோலீசுக்காரன் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் அதற்கும் மோடி தான் காரணமா? நீ மோடிபோபியா பிடித்து அலைகிறாய்....
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
27-மார்-201812:19:29 IST Report Abuse
Ram Sekarபோலீசுக்காரன் மட்டுமல்ல எல்லா கட்சிகளிலும் கொள்ளை அடிக்கிறவன் இருக்கான்....
Rate this:
Share this comment
balakrishnan - coimbatore,இந்தியா
27-மார்-201814:43:41 IST Report Abuse
balakrishnanராம் சேகர் சொல்வது சரிதான், ஊழல் செய்பவன், லஞ்சம் வாங்குபவன் எல்லா கட்சியிலும் இருக்கிறான், தாங்கள் மட்டுமே நேர்மையின் தூதுவர்கள் போல பி.ஜெ.பி பேசுவது தான் ஏற்கமுடியவில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை