ஜாமினில் வெளியே வந்தார் சல்மான்கான்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜாமினில் வெளியே வந்தார் சல்மான்கான்

Added : ஏப் 07, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Actor Salman Khan, Salman Khan bail, magistrate Ravindra Kumar Joshi, நடிகர் சல்மான் கான், மான் வேட்டை, சல்மான்கானுக்கு ஜாமின், ஜோத்பூர் கோர்ட் , சல்மான்கானுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை, மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷி ,  deer hunter,  Jodhpur court, Salman Khan was sentenced to five years in prison,

ஜோத்பூர்: மான் வேட்டையாடிய நடிகர் சல்மான் கானுக்கு ஜாமின் வழங்கி ஜோத்பூர் கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து அ
ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர், சல்மான் கான், 52. ராஜஸ்தான் மாநிலத்தில், 1998ல், இரண்டு அரிய வகை மான்களை சுட்டுக் கொன்ற வழக்கில், ஜோத்பூர் நீதிமன்றம், நேற்று முன்தினம் (ஏப்.,5) அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஜோத்பூர் சிறையில், சல்மான் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, சல்மான் கான் தாக்கல் செய்த மனு, மாஜிஸ்திரேட், ரவீந்திர குமார் ஜோஷி முன், நேற்று(ஏப்.,6) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்துக்கு பின், ஜாமின் மனு மீதான தீர்ப்பை, இன்று வழங்குவதாக, மாஜிஸ்திரேட் அறிவித்தார். இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சல்மான்கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஏப்-201817:37:53 IST Report Abuse
தமிழ்வேல் இவன் இன்னுமா இந்தியாவில் இருக்கான் ?
Rate this:
Share this comment
Cancel
குத்புதீன்.திருவாருர் இந்த வியத்தில் கருத்து சொன்னால் மத சாயம் பூசுவார்கள்சல்மான் ஆதரவாளன் அல்ல நான்.மான் வேட்டையாடிய வழக்கு 20ஆண்டுகள் நடந்துள்ளது.இன்னும் பல கோர்ட்டுகளில் விசாரனை தொடரப் போகுது.சல்மான் தப்பு செய்தவன்தான்.மறுக்க வில்லை.சல்மானை போல் பலர் பொளுது போக்குகக்காக இன்றும் இதே போல் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.இந்த ஆளு பிரபலம் என்பதாலாயே இப்படி முக்கியத்துவம்.மானின் ஆயுள் 5வருடமே...அறிய வகை என்றாலும் அழியும் நிலையில் உள்ள இனம் அல்ல.நீதிபதிகள் சிறை தண்டனைக்கு பதில் மிகப் பெ.ரிய அபராதத் தொகை விதித்து இருக்கலாம்..அவன் பணக்காரன்.அப்பவே வழக்கும் முடிவுக்கும் வந்து இருக்கும்.இப்பொளுது என்ன சாதிதத்து விட்டார்கள் நேற்று நீதிபதி 5வருச தண்டனை..இண்று அதே கோர்ட் ஜாமின்.கேளிக்கூத்தாக இல்லையா?20 வருட வழக்கு இன்னும் 20ஆண்டுகள் இந்த வெட்டிக் கேஸை விசாரிக்கும்.நேர விரயம் இல்லையா...இடையில் ஹைகோர்ட் வேறு இவர் குற்றவாளி இல்லன்னு தீர்ப்பு சொல்லி இருக்கு...என்ன சட்டங்கள்....ஆளை கார் ஏற்றி கொன்ற வழக்கே ஒன்றும் இல்லாம போயிடுச்சு..மான் கேஸா நிக்க போவுது...10ஆயிரம் அபராதத்தை பத்து லட்சமா ஆக்கி அவரிடம் வசூலித்து முடித்து இருக்கலாமே...
Rate this:
Share this comment
Cancel
aanthai - Toronto,கனடா
07-ஏப்-201817:23:59 IST Report Abuse
aanthai நாட்டில் நீதி செத்து வெகுநாட்கள் ஆகிவிட்டது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X