கேமரா முன் எல்லோரும் அழகு - ஒளிப்பதிவாளர் சவுந்தர்ராஜன் 'பளிச்'| Dinamalar

கேமரா முன் எல்லோரும் அழகு - ஒளிப்பதிவாளர் சவுந்தர்ராஜன் 'பளிச்'

Added : ஏப் 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கேமரா முன் எல்லோரும் அழகு - ஒளிப்பதிவாளர் சவுந்தர்ராஜன் 'பளிச்'

கலைத்துறையில் காவியம் படைப்பது என்பது சிரமமானது மட்டுமின்றி சிக்கலானதும்கூட. சிந்தனை ஆற்றலும், கடின உழைப்பும் இருப்போரே சினிமா துறையில் சரித்திரம் படைப்பர். அந்த வரிசையில் மின்னொளியில் கண்ணைப் பறிக்கும் காட்சிகளை உண்மையென்றாக்கும் வல்லுனர். ஆகாய அதிசயங்களை அகன்ற திரையில் காட்டும் அற்புதர். அவர் ஒளிப்பதிவாளர் சவுந்தர்ராஜன்,41. அவருடன் நேர்காணல்...

* உங்களை பற்றி...சொந்த ஊர் திருநெல்வேலி. சென்னைக்கு வேலை தேடி சென்றேன். அங்கு விஷூவல் கம்யூனிகேஷன் படித்தேன். அப்படியே ஒளிப்பதிவாளராகிவிட்டேன்.

* ஒளிப்பதிவு செய்த படங்கள்...மாற்றான், ரோமியோ ஜூலியட், போகன், கனாக்கண்டேன், பில்லா, வாய்மூடி பேசு, பெண்களின் டைரி உட்பட பல படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளேன். 600 விளம்பர படங்களையும் ஒளிப்பதிவு செய்துள்ளேன்.

* ஒளிப்பதிவாளருக்கு என்ன தேவைசில காட்சிகளை் வெளியில் சூட்டிங் செய்தால் நன்றாக இருக்கும். சில காட்சிகளை இன்டோர் சூட்டிங் எடுத்தால் நன்றாக இருக்கும். எந்த கதையை எப்படி எடுக்க வேண்டும் என்ற சிந்தனை மனதில் முளைக்க வேண்டும்.

* எல்லோரையும் அழகாக காட்ட முடியுமாசிலருக்கு கேமரா பேஸ் உண்டு. சிலர் நேரில் பார்க்க அழகாக இருப்பார்கள். கேமராவில் ஜொலிக்க மாட்டார்கள். சிலர் நேராக பார்க்கும் போதும், கேமராவிலும் அழகாக இருப்பார்கள்.
* பிடித்த ஒளிப்பதிவாளர்பாலு மகேந்திரா, பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சின்கா உட்பட பலர் பிடிக்கும்.

* சண்டைக் காட்சிகள் கஷ்டமாசண்டைக்காட்சிகளை ஒளிப்பதிவு செய்ய சிரமப்பட வேண்டும். கடலில் சண்டை, கப்பலில் சண்டை, தீப்பிடிக்கும் போது சண்டை காட்சிகளை ஒளிப்பதிவு செய்வது கஷ்டம். தற்போது கிராபிக்ஸ் வந்துள்ளதால், பிரச்னை இல்லாமல் பதிவு செய்கிறோம்.
* நடனங்களில் ஒளிப்பதிவு...படத்தின் கதைகள் எடுத்து முடித்த பின்பு அல்லது முன்கூட்டியே நடனங்களை ஒளிப்பதிவு செய்ய வேண்டியது வரும். ஒரு நடன ஒளிப்பதிவுக்கு 4, 5 நாட்கள் கூட தேவைப்படும்.

* பொழுது போக்குஏராளமான புத்தகங்கள் படிப்பேன். ஆங்கில படங்கள் பார்ப்பேன். டேபிள் டென்னிஸ் விளையாடுவேன்.

* அரசியல் ஆர்வம்...அரசியலில் ஆர்வம் இல்லை. மக்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு ஒட்டளிப்பது மூலம் அவர்கள் அறியாமலே அரசியலில் உள்ளனர்.

* உங்கள் லட்சியம்சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும். இதற்கு மன உறுதியும், உடல் உறுதியும் வேண்டும், என்றார்.இவரை soundar16@gmail.comல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X