எதிர்க்கட்சிகளுக்கு நாராயணசாமி பாராட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்க்கட்சிகளுக்கு நாராயணசாமி பாராட்டு

Added : ஏப் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ''தமிழகத்தில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன,'' என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளோம். மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசு மீது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கின், இன்றைய விசாரணைக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும்.தமிழகத்தில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் எதிர்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன; அதை நான் வரவேற்கிறேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை