Women bikers successfully complete nearly 17,000 km long journey | ஆறு ஆசிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் : தெலுங்கானா பெண்கள் சாதனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆறு ஆசிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் : தெலுங்கானா பெண்கள் சாதனை

Added : ஏப் 09, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஆறு ,ஆசிய நாடுகளில், பைக்கில், சுற்றுப்பயணம் : தெலுங்கானா ,பெண்கள், சாதனை

ஐதராபாத்: தென்கிழக்காசிய நாடுகளில் பைக் மூலம் பயணம் செய்த தெலுங்கானா மாநில பெண்கள் தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து நாடு திரும்பி உள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தெலுங்கானா சுற்றுலா வளர்ச்சிகழகம் சார்பில் நான்கு பெண்கள் ஆறுதென்கிழக்காசிய நாடுகளுக்கு பைக் மூலம் சுற்றுலா புறப்பட்டனர். நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக சென்று மணிப்பூர் மாநில எல்லைவழியே மியான்மர் நாட்டிற்கு சென்றனர். தொடர்ந்து தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மற்றும் வங்கதேசத்தில் மொத்தம் 16,992 கி.மீ தூரம் வரையில் சுற்றுப்பயணம் செய்துள்ளனர்.
இது குறித்து தெலுங்கான மாநில சுற்றுலா வளர்ச்சி கழகத்தை சேர்ந்த இயக்குனர் மனோகர் கூறுகையில், பெண்களின் பயணத்தின் போது பல்வேறு தர மக்களை சந்தித்து தெலுங்கானா மாநில சற்றுலா குறித்தும் இந்தியா குறித்தும் விளக்கியதாகவும் கூறினார். மேலும் வேறு எந்த மாநிலமும் இதுவரை செய்யாத இந்த தனித்துவமான விஜயத்திற்காக பெண்கள் மிகவும் சந்தோசமாக உள்ளதாக கூறினார்.
தென்கிழக்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்த பெண்களில் ஒருவரான சாந்தி சூசன் மாநில காவல் துறையில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயணம் குறித்து அவர் கூறுகையில், இப்போது நான் வித்தியாசமாக விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன், என்னை புதிதாக்குவதற்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாக இருந்தது, நான் எந்த சவாலும் எடுக்க முடியும் என்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்று அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
09-ஏப்-201819:27:22 IST Report Abuse
எல்.கே.மதி ஐதராபாத்: தென்கிழக்காசிய நாடுகளில் பைக் மூலம் பயணம் செய்த தெலுங்கானா மாநில பெண்கள் தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து நாடு திரும்பி உள்ளனர். இது வெறும் சுற்றுப்பயணமா? ஆந்திராவுக்கு சிறப்பு நிலை வேண்டி,ஆதரவுப் பயணமா?
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
09-ஏப்-201814:12:53 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி பில்லியார் மாதிரீ ஹைதெராபாத் சுத்தீ வந்து வச்சீ பரிசு வாங்கிவச்சிரலமில்ல.
Rate this:
Share this comment
Cancel
Homer Simpson - Springfeild,யூ.எஸ்.ஏ
09-ஏப்-201811:50:46 IST Report Abuse
Homer Simpson தமிழ்நாட்டு பெண்கள் மூன்று பேர் கோவையிலிருந்து லண்டன் வரை காரில் சென்றது நினைவு இல்லையோ?
Rate this:
Share this comment
09-ஏப்-201816:49:46 IST Report Abuse
KarthickKumarwe r first indian particular women support to all...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X