பாலியல் புகார்: பா.ஜ. எம்.எல்.ஏ-வுக்கு முதல்வர் யோகி சம்மன்| Dinamalar

பாலியல் புகார்: பா.ஜ. எம்.எல்.ஏ-வுக்கு முதல்வர் யோகி சம்மன்

Added : ஏப் 10, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 முதலமைச்சர் யோகி ஆத்யநாத் , பாலியல் புகார், பாரதிய ஜனதா எம்.எல்.ஏ குல்தீப் சிங் ,  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி சம்மன், உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.,உத்தரப்பிரதேச மாநிலம், பாலியல் பலாத்காரம், பாரதிய ஜனதா எம்.எல்.ஏ,
Sexual complaint, Bharatiya Janata MLA, Uttar Pradesh Chief Minister Yogi Samman, Uttar Pradesh Bharatiya Janata MLA,
Chief Minister Yogi Adityanath, Uttar Pradesh, Bharatiya Janata MLA Kuldeep Singh,

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ. எம்.எல்.ஏ. தனது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை, காவல்நிலைய விசாரணையில் உயிரிழந்ததையடுத்து சம்பந்தப்பட்ட எம்எல்ஏவுக்கு முதலமைச்சர் யோகி ஆத்யநாத் சம்மன் அனுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோவ் மாவட்டத்தில் 18 வயது இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட அப்பெண் தன்னை குல்தீப் சிங் என்ற பாஜ.. எம்.எல்.ஏ. கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் தெரிவித்தார். பா.ஜ. எம்.,.எல்.ஏ. மீது போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறிய அந்த இளம்பெண்,, லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லம் அருகே தீக்குளிக்க முயற்சித்தார்.அப்போது தந்தையும் போராட்டம் நடத்தினார்.
போலீசாரால்கைது செய்யப்பட்ட தந்தை போலீஸ் காவலில் இருந்த போது இறந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் தீயாக பரவியது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குற்றாச்சாட்டிற்கு ஆளான எம்.எல்.ஏ.வை விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்மன் அனுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Iqubal Wahab - Singapore,சிங்கப்பூர்
10-ஏப்-201818:13:04 IST Report Abuse
Mohamed Iqubal Wahab பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை அடித்தே கொன்றிருக்கிறார்கள். யோகி வீட்டு வாசலில் போராடிய பெண்ணை யோகி திரும்பிகூட பார்க்கவில்லை. ஒவ்வொரு இந்தியனின் நிலையும் இதுதான்.
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
10-ஏப்-201814:17:04 IST Report Abuse
N.Kaliraj சம்மன் மட்டும்தான் வேறெதுவும் நடக்காது...
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
10-ஏப்-201813:50:09 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. சாமியாரின் U P ல் தான் ஏகப்பட்ட என்கவுண்டர் நடக்குதாமே, சாமியார் யோக்கியராக இருந்தால் இந்த பாலியல் பலாத்கார ரவுடி யையும் அந்த பட்டியலில் சேர்க்கவேண்டியதுதானே? என்கவுண்டர் அரசியல் எதிரிகளுக்கு மட்டும் தானா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X