பா.ஜ., ஆட்சியில் வளர்ச்சி இல்லை: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு| Dinamalar

இந்தியா

பா.ஜ., ஆட்சியில் வளர்ச்சி இல்லை: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

Added : ஏப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி:நீட் தேர்வை கொண்டுவந்து தென்மாநில மக்களை, பிரதமர் மோடி பழிவாங்கியுள்ளார் என, முதல்வர் நாராயணசாமி பேசினார்.புதுச்சேரியில் மத்திய பா.ஜ., ஆட்சிக்கு எதிராக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அவர் பேசியதாவது:பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் 9 சதவீதம், விவசாயத்தில் 4 சதவீதம், தொழிற்சாலையில் 7 சதவீதமும், சேவையில் 35 சதவீதம் வளர்ச்சி இருந்தது. தற்போது நாட்டின் வளர்ச்சி 5.7 சதவீதமாக உள்ளது. பா.ஜ., ஆட்சியில் வளர்ச்சி இல்லை.நாட்டின் கல்வி தரத்தை உயர்த்த போவதாக பிரதமர் கூறினார். ஆனால், வட நாட்டில் இருப்பவர்களுக்கு சாதகமாக நீட் தேர்வை கொண்டு வந்து தென்மாநில மக்களை திட்டமிட்டு பழிவாங்கியுள்ளார்.ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்லில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. குஜராத் தேர்தலில் காங்., வேட்பாளர்கள் 30 பேர் 500 முதல் 1000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்றனர். இல்லையென்றால் குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி வந்திருக்கும்.தற்போது கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். வரும் 2019ம் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் பிரதமராவது உறுதி.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை