கவர்னரின் தடையை முறியடித்து திட்டங்களை நிறைவேற்றுவோம்:முதல்வர் நாராயணசாமி சவால்| Dinamalar

இந்தியா

கவர்னரின் தடையை முறியடித்து திட்டங்களை நிறைவேற்றுவோம்:முதல்வர் நாராயணசாமி சவால்

Added : ஏப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

புதுச்சேரி;கவர்னரின் முட்டுக்கட்டைகளை முறியடித்து, மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவோம் என, முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.மத்திய அரசை கண்டித்து, புதுச்சேரி காங்., சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அவர் பேசியதாவது:மக்களுக்கான நலத்திட்டகளை நிறைவேற்ற கவர்னர் தடையாக உள்ளார். கோப்புகளை திரும்பி அனுப்புகிறார். ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி, தனது உத்தரவுகளை டிவிட்டர், வாட்ஸ் ஆப்பில் வெளியிடுகிறார்.காங்., ஆட்சியை கவிழ்ப்பதில் மோடி அரசு மும்முரமாக உள்ளது. இதனால், நிதி கேட்டால் கொடுப்பதில்லை. ஆனால், மாநில வருமானத்தை பெருக்கி இந்தாண்டு 95 சதவீதம் செலவு செய்துள்ளோம். வரும் காலங்களில் கவர்னரின் முட்டுக்கட்டையை முறியடித்து, திட்டங்களை நிறைவேற்றுவோம்.எதிர்க்கட்சி என்றால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றும்போது ஒத்துழைக்க வேண்டும். அரசு தவறு செய்தால் தட்டிக் கேட்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்க வேண்டுமே தவிர, எதிரி கட்சியாக இருக்கக் கூடாது. டில்லியில் அமித்ஷாவை சந்தத்து முதல்வர் பதவி கொடுத்து விடுங்கள். சட்டசபையை 6 மாதம் முடக்குங்கள் என்கிறார். அவர் பதவி கனவில் மிதக்கிகிறார்.காவிரி நதி நீர் பிரச்னையில் புதுச்சேரி அரசு மட்டும் 2 தீர்ப்புகளை பெற்றுள்ளது. நமக்கு கிடைக்க வேண்டியது 6 டி.எம்.சி., தண்ணீர். ஆனால், 7 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளது. காரைக்கால் கடைமடை விவசாயிகள் 5 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர் வைக்கவும் தீர்ப்பு வந்தது. இத்தீர்ப்பை மார்ச் 29ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினோம். அவரோ கோப்புக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என திரும்பி அனுப்பினார். அவர் புதுச்சேரி கவர்னரா அல்லது மத்திய அரசின் ஏஜென்டாக என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கவர்னர் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்காலம். ஆனால், மாநில உரிமைகளை தட்டிப் பறிக்க உறுதுணையாக இருக்க கூடாது. கவர்னருடன் ஒத்து போனால் கோப்புகளுக்கு கையெழுத்து போடுவார் என அமைச்சர்கள் கூறினர். அதற்கு முயற்சி செய்தும் தோல்வி அடைந்து விட்டோம். நியாயமான கோப்பை அனுப்பினாலும், அதனை திரும்பி அனுப்பி நமது அரசை செயல்படாமல் தடுப்பது என்ற மோடியின் திட்டத்தை, கவர்னர் நிறைவேற்றி வருகிறார்.புதுச்சேரி மாநிலம் டில்லி அல்ல. தமிழகத்திற்கு என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை புதுச்சேரி மக்களுக்கும், அமைச்சரவைக்கும் உள்ளது. சட்டம் ஒழுங்கு, நிதிநிலை, நிலம், நிர்வாகம் முழுவதும் மாநில சட்டசபைக்கு உட்பட்டது.மாநிலம் சம்பந்தமான பிரச்னைகள், திட்டங்களுக்கு அமைச்சரின் பரிந்துரையின் பேரில் தான், கவர்னர் செயல்பட வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து எடுக்கப்படும் திட்டங்களுக்கு முதல்வரின் அறிவுரைப்படி கவர்னர் செயல்பட வேண்டும். கவர்னருக்கென்று தனியாக எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. அரசின் பரிந்துரைகளை அவர் நிராகரிக்க சட்டத்தில் இடமில்லை. இவ்வாறு முதல்வர் நாராயணசாமி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை