முதல்வர் பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்

Added : ஏப் 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருவாரூர்: ''பிரதமரை சந்திக்க, நேரம் கேட்காத முதல்வர், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.
காவிரி உரிமை மீட்பு பயணத்தை, 7ம் தேதி, திருச்சி, முக்கொம்பில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் துவக்கினார். நான்காம் நாள் பயணத்தை, நேற்று காலை, திருவாரூரில், அவரது இல்லத்தில் இருந்து துவக்கினார். திருவாரூரில் இருந்து, காட்டூர் சென்ற அவர், தன் பாட்டி அஞ்சுகம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

மாட்டு வண்டி: அங்கிருந்து, திருக்கண்ணமங்கை, அம்மையப்பன் வழியாக குளிக்கரை வந்தார். அங்கிருந்து, மாட்டு வண்டியில் தேவர்கண்டநல்லூர் வந்தார். அங்கு, விவசாயிகள் மத்தியில், அவர் பேசியதாவது: காவிரி பிரச்னையில், அரசு சார்பில் கூட்டப்பட்ட, அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண் டோம். அதில், 'பிரதமரை சந்திக்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; அந்த தீர்மானம், இன்று வரை நிறைவேற்றப் படவில்லை. நேற்று முன்தினம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'பிரதமரை சந்திக்க, தமிழக அரசு சார்பில், கோரிக்கை வைக்கப்படவில்லை' என, கூறியுள்ளார். இதை, தமிழக அரசோ, முதல்வரோ, துணை முதல்வரோ மறுக்கவில்லை. எனவே, முதல்வர், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தங்கள் நாற்காலி போய் விடுமோ என்ற பயத்தில், பதவியில் உட்கார்ந்துள்ளனர். காவிரியில், நம் உரிமையை மீட்கவே, இந்த நடை பயணம்.

தொடரும்: இந்த பயணத்தோடு, போராட்டம் முடிந்துவிடும் என, நினைக்க வேண்டாம். மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார். பின், கூத்தாநல்லூர், மன்னார்குடி வழியாக, திருத்துறைப்பூண்டி சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
24-ஏப்-201806:54:22 IST Report Abuse
kundalakesi இந்த "பதவி விலகு" "பதவி விலகு" ன்னு கூக்குரல் போட்றவங்க பயித்தியங்களோ. இவன் சொல்லுவானாம், அவன் ஓடிப்போய் ராஜினாமா செய்வானாம் , எதனை தடம் இவன் பண்ணியிருக்கான்?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201809:00:44 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒரு நாள் முதல்வர் மாதிரி ஸ்டாலினை ஒரு நாளாவது முதல்வராக இருக்க விடுங்களேன்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201808:58:15 IST Report Abuse
Srinivasan Kannaiya பாவம் எவ்வளவு நாள்தான் அண்ணண் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று இலவு காத்த கிளியாக இருக்கிறார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X