சில வீடுகளில் கறுப்புக்கொடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சில வீடுகளில் கறுப்புக்கொடி

Updated : ஏப் 12, 2018 | Added : ஏப் 12, 2018 | கருத்துகள் (204)
Advertisement

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில வீடுகளிலும், கடைகளிலும், கட்சியினர் வீடுகளிலும் கறுப்பு கொடி ஏற்றப்பட்டது.
மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள், ஒட்டுநர்கள் 300க்கு மேற்பட்டோர் கறுப்பு சட்டை அணிந்தும், கறுப்பு கொடி ஏந்தியும், லாரிகளில் கறுப்பு கொடியினை கட்டியும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி அலுவலகங்களிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

சென்னையில் ' modi go back ' என எழுதப்பட்ட ராட்சத கறுப்பு பலூனை பறக்க விட்டு எதிர்ப்பை காட்டி உள்ளனர். கறுப்பு சட்டை அணிந்து, கறுப்புக் கொடியுடன் அவர்கள் பேரணியும் சென்றனர். இதே போன்று புதுச்சேரியில் திமுக.,வினர் அலுவலகம், வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (204)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sourashtra Samachar - california,யூ.எஸ்.ஏ
16-ஏப்-201810:19:46 IST Report Abuse
Sourashtra Samachar மோடி திரும்ப போய்விட்டால் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடுமா ? இதை விட எனக்கு பதவியை குடு என்று நேரடியாகவே கேட்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Hari Raj - Kuala Lumpur,மலேஷியா
13-ஏப்-201808:44:23 IST Report Abuse
Hari Raj மோடிக்கு எதிராக தமிழகத்தில் குலைத்துக்கொண்டிருக்கும் எதிர் கட்சிகளின் முக்கிய குறிக்கோள் பிஜேபி கர்நாடகாவில் தோற்க்க வேண்டும். இதனை நன்கு உணர்ந்த மோடி அவர்களுக்கு எதிராக ஒரு மவுன அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார். தமிழகத்திற்கு வரவேண்டிய நீர் சரியான நேரத்தில் சரியாக வரும். மோடி ஒருபொழுதும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டார்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஏப்-201807:10:45 IST Report Abuse
Bhaskaran ஜனநாயகரீதியில் எதிர்ப்புத்தெரிவிப்பது எல்லா நாடுகளிலும் உள்ளது நமூரில் சாதாரணமக்களுக்கு தொல்லைதரும் விதமாக நடத்துவதுதான் கண்டிக்கத்தக்கது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை