காவிரி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவே காவிரி மீட்பு பயணம்: ஸ்டாலின்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவே காவிரி மீட்பு பயணம்: ஸ்டாலின்

Added : ஏப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சிதம்பரம்: 'தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதற்கு மாநில அரசும் துணை போகிறது' என காவிரி மீட்பு பயணத்தின் போது ஸ்டாலின் பேசினார்.மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சியினர் 'காவிரி மீட்பு பயணத்தின் 6வது நாளான நேற்று நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவிலில் துவங்கி சீர்காழி, கொள்ளிடம் வழியாக கடலுார் மாவட்ட எல்லையான கடவாச்சேரிக்கு வந்தனர்.அங்கு, விவசாயிகளிடையே ஸ்டாலின் பேசுகையில், 'நீண்ட காலமாக இருக்கும் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் உணர்வோடு மீட்பு பயணம் துவங்கினோம். பயணத்தில் டெல்டா பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எழுச்சியையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்தினர். மாநில மற்றும் மத்திய அரசுகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு மாநில அரசும் துணை நிற்கிறது.நியாயமாக கறுப்புக்கொடி காட்டுகிறோம் என்றால், அதனை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வருபவர்களுக்கு இருக்க வேண்டும். பிரதமர் மோடி, விமானத்தில் வந்து இறங்கி சாலை வழியாக, காரில் 5 நிமிடங்களில் செல்லக் கூடிய கிண்டிக்கு கூட ெஹலிகாப்டரில் சென்று விழாவில் பங்கேற்கிறார். ஆகாயத்தில் பறந்தாலும், தேர்தல் வரும் போது நீங்கள் கீழே இறங்கி வந்து தான் ஆக வேண்டும். அதனை அவர் மறந்துவிடக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் ஓயாது' என்றார். முன்னதாக மாவட்ட எல்லையான வல்லம்படுகையில் குமராட்சி ஒன்றிய தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலர் மாமல்லன் தலைமையில் அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் காவிரி மீட்பு பயணக் குழுவினருக்கு வரவேற்பு அளித்தனர். காட்டுமன்னார்கோவிலில் இருந்து துவங்கிய மற்றொறு குழுவுக்கு சிதம்பரம் மந்தக்கரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். காங்., தலைவர் திருநாவுக்கரசர், மாநில துணைச் செயலர் ராஜ்குமார், மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், வி.சி., தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், தி.மு,க., முன்னாள் அமைச்சர்கள் பாலு, நேரு, சாமிநாதன், ரகுபதி, வழக்கறிஞர் இளங்கோவன், பொன்குமார், தனபாலன், காங்., மாவட்ட தலைவர் விஜயசுந்தரம், செந்தில்குமார், வக்கீல் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை