மோடியின் உண்ணாவிரதம் நாடகம் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு| Dinamalar

மோடியின் உண்ணாவிரதம் நாடகம் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

Added : ஏப் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி:''பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருப்பது,போலி நாடகம்,'' என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:பிரதமர் மோடி துவக்கி வைக்கும், ராணுவ தளவாட கண்காட்சிக்கு, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அழைப்பு விடுத்திருந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசை கண்டிக்கும் வகையில், அந்த விழாவை புறக்கணித்துள்ளேன்.புதுச்சேரி, தமிழக விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து, சென்னை வந்து சென்றுள்ள பிரதமர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.பார்லிமென்டில், பா.ஜ., நேரடியாக இறங்காமல், கூட்டணியில் உள்ள, அ.தி.மு.க.,வை மறைமுகமாக துாண்டி விட்டு, பார்லிமென்டை முடக்க செய்துஉள்ளது. காங்., ஏற்கனவே உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. அதற்கு போட்டியாக, பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கிறார். விமானத்தில் பறந்து கொண்டே மோடி உண்ணாவிரதம் இருக்கிறாரா. இது, மக்களை ஏமாற்றும் போலி நாடகம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
13-ஏப்-201808:19:07 IST Report Abuse
Loganathan Kuttuva உண்ணா விரதம் இருக்கும் அரசியல் தலைவர்கள் மேடையில் உட்கார்ந்து பேசுவார்கள். ஆனால் மோடி மற்றும் தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்துகொண்டே தங்கள் பணிகளை செய்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை