AR Rahman bags two national awards | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருது

Updated : ஏப் 13, 2018 | Added : ஏப் 13, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
AR Rahman, National Film Awards, Bahubali 2, ஏஆர் ரஹ்மான்,  65வது தேசிய திரைப்பட விருதுகள், தமிழில் சிறந்த படமாக செழியன் இயக்கிய டூ-லெட்,மத்திய அரசு, 
ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருது, பாகுபலிக்கு இரண்டு தேசிய விருதுகள், காற்று வெளியிடை,  ஸ்ரீதேவி நடித்த மாம் ,சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ், 
65th National Film Awards, Central Government,
Two national awards for Rahman, two national awards for Bahubali,  Best Special Effects,

புதுடில்லி: 65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசை மற்றும் பின்னணி இசைக்கான இரண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த படமாக செழியன் இயக்கிய, "டூ-லெட்" தேர்வாகி இருக்கிறது.

சினிமா துறையில் உள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, தேசிய விருதுகளை அறிவிக்கிறது. 65வது தேசிய விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது.


ரஹ்மானுக்கு இரண்டு விருது


மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், ஸ்ரீதேவி நடித்த மாம் படத்திற்கு பின்னணி இசைக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பாகுபலிக்கு இரண்டு விருதுகள்


இந்திய சினிமாவில் அதிக வசூல் சாதனை புரிந்த, ராஜமவுலி இயக்கிய பாகுபாலி 2 படத்திற்கு, சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ், மக்களைக் கவர்ந்த மற்றும் ஆக்ஷ்ன் காட்சிகளுக்காக 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


மற்ற விருதுகள் விபரம்.....


சிறந்த நடிகர் : ரித்தி சென்(நகர்கிரதான்)

சிறந்த நடிகை : ஸ்ரீதேவி (மாம்)

சிறந்த இயக்குநர் : ஜெயராஜ் (பயணக்கம்)

சிறந்த துணை நடிகர் : பஹத் பாசில் (தொண்டிமுதலும் த்ரிகாஷியம்)

சிறந்த துணை நடிகை : திவ்யா தத்தா (இரடா)

சிறந்த திரைக்கதை : தொண்டிமுதலும் த்ரிகாஷியம்

சிறந்த திரைக்கதை தழுவல் : பயணக்கம்

சிறந்த பின்னணி பாடகர் : யேசுதாஸ்

சிறந்த பின்னணி பாடகி : சாஷா திரிபாதி(வான் வருவான்... காற்று வெளியிடை)

சிறந்த குழந்தை நட்சத்திரம் : பனிதா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்)

சிறந்த ஒளிப்பதிவு : பயணக்கம்

சிறந்த படத்தொகுப்பு : வில்லேஜ் ராக்ஸ்டார் மற்றும் ரிமா தாஸ்

சிறந்த பாடலாசிரியர் : முத்துரத்னா, மார்ச் 22

சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான் (படம் : காற்று வெளியிடை)

சிறந்த பின்னணி இசை : ஏ.ஆர்.ரஹ்மான் (படம் : மாம்)

சிறந்த ஆக்ஷ்ன் : அப்பாஸ் அலி மொகுல் (படம் : பாகுபலி 2)

சிறந்த நடனம் : கணேஷ் ஆச்சார்யா (படம் : டாய்லெட் ஏக் பிரேம் கதா)

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : பாகுபலி 2

சிறந்த குழந்தைகள் படம் : மார்கியா

சிறந்த சுற்றுச்சூழல் படம் : இரடா

சிறந்த சமூக படம் : ஆலொருக்கம்

மக்களை கவர்ந்த படம் : பாகுபலி 2


சிறப்பு விருதுகள்


மராத்தி படம் : மார்கியா

ஒரியா படம் : ஹலோ மிரர்

சிறந்த நடிகை : பார்வதி (படம் : டேக் ஆப்)

சிறந்த நடிகர் : பங்கஜ் திரிபாதி (படம் : நியூட்டன்)

தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது : தப்பா

சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா விருது : பேம்பாலி (சிஞ்சர்)

தாதா சாகேப் பால்கே விருது : வினோத் கன்னா (மறைந்த ஹிந்தி நடிகர்)


மாநில மொழி படங்கள் விருது


சிறந்த தமிழ் படம் : டூ-லெட்

சிறந்த தெலுங்கு படம் : காஸி

சிறந்த மலையாளம் படம் : தொண்டிமுதலும் த்ரிகாஷியம்

சிறந்த கன்னட படம் : ஹெப்பெத்து ராமாக்கா

சிறந்த ஹிந்தி படம் : நியூட்டன்

சிறந்த பெங்காலி படம் : மயூராக்ஷி

சிறந்த அசாமி படம் : இஷ்ஷூ

சிறந்த குஜராத்தி படம் : 'த்'

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathiyenthira H - MUKKUDAL,இந்தியா
13-ஏப்-201819:11:30 IST Report Abuse
Sathiyenthira H வாழ்த்துக்கள் A R RAHMAN சார்......
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஏப்-201818:13:58 IST Report Abuse
முக்கண் மைந்தன் சந்தேகமேயில்லெ....., ஞானதேசிகனுதான் Number One..., ரஹ்மான் Sir வர்றவரைக்கும்....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-ஏப்-201817:22:39 IST Report Abuse
இந்தியன் kumar மதம் பார்க்கவில்லை என்பது இப்பவாவது ஒரு சிலருக்கு புரியும் . வாழ்த்துக்கள் ரஹ்மான் அவர்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X