ஒரே நாளில் வீட்டை கட்டி முடிக்கலாம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஒரே நாளில் வீட்டை கட்டி முடிக்கலாம்

Added : ஏப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஒரே நாளில் வீட்டை கட்டி முடிக்கலாம்

உலகில், 100 கோடி பேருக்கும் மேல் வீடில்லாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு எளிய வீடுகளை கட்டித் தர, பல அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகள், திட்டங்கள் பல செயல்படுத்தி வருகின்றன.
இருந்தாலும், வீடு கட்டும் திட்டங்கள் முடிவடைய அதிக நாட்கள் ஆகின்றன; அதற்கான செலவும் அதிகரிக்கிறது. இந்த செலவுகளை குறைக்கவும், மலிவு விலையில் வீடுகளை கட்டவும், 'நியூ ஸ்டோரி' என்ற அமெரிக்க தொண்டு அமைப்பும், 'ஐகான்' என்ற கட்டுமான நிறுவனமும் இணைந்து செயல்படுகின்றன.
ஐகான் உருவாக்கிய, 'வல்கன்' பிரமாண்டமான முப்பரிமாண அச்சு இயந்திரம், 24 மணி நேரத்திற்குள், 650 சதுர அடி வீட்டை, 'அச்சிட்டுத்' தந்து விடுகிறது.
வீடு கட்டும் இடத்திலேயே, வல்கன் இயந்திரத்தை நிறுவி அச்சிடலாம். மேலும், சிமென்ட் போன்ற கட்டுமான பொருட்களை, விரயம் ஏதுமில்லாமல் பயன்படுத்தலாம். இதனால், ஒரு சிறிய வீட்டுக்கு, ஆறரை லட்சம் ரூபாய் தான் செலவாகும். விரைவில், இந்த செலவை, 2.6 லட்சம் ரூபாயாக குறைக்கவிருப்பதாக, ஐகான் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுமான நேரத்தையும், 12 மணி நேரமாக குறைக்க முடியுமாம்.
ஏற்கனவே முப்பரிமாண அச்சு முறையில் வீடு கட்டப்பட்டாலும், அதற்கு செலவு அதிகம் என்பதோடு, பார்ப்பதற்கு அழகாக இருப்பதில்லை என்ற குறைகள் உண்டு.
ஐகானின் முப்பரிமாண அச்சு வீடுகள் அழகாகவும், வலுவாகவும், தேவைக்கேற்ப உள் கட்டமைப்பும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, எல் சால்வடோரில் வல்கன் அச்சியந்திரம் மூலம், 100 வீடுகள் கட்டி தரும் பணியில் ஈடுபட்டுள்ளது, நியூ ஸ்டோரி.
விரைவில், பல வளரும் நாடுகளில், இதேபோல வீடுகளை கட்டி தரவும் நியூ ஸ்டோரி திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X