கை உலர்த்தியா; நோய் பரப்பியா...| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கை உலர்த்தியா; நோய் பரப்பியா...

Added : ஏப் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கை உலர்த்தியா; நோய் பரப்பியா...

உணவகம், மருத்துவமனை, திரையரங்கு போன்ற பொது இடங்களில், கழுவிய கைகளை உடனே உலர்த்துவதற்கு, உலர்த்திகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இது ரொம்ப வசதியானது என்றாலும், இதனால் நோய் பரப்பும் கிருமிகள் கைகளில் திணிக்கப்பட வாய்ப்புள்ளதாக, 'அப்ளைடு அண்ட் என்விரான்மென்டல் மைக்ரோபயாலஜி' இதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது.
பொது இடங்களில், குறிப்பாக, கழிப்பறை போன்றவற்றில் இயல்பாகவே பல்கிப் பெருகும் நோய்க் கிருமிகள், 'ஹாட் ஏர் டிரையர்' எனப்படும், இந்த காற்று கருவியின் வழியே, பயன்படுத்துவோரின் சுத்தமான கைகளின் மீது பாய்ச்சப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கிருமிகளை போக்க தான் கைகளைக் கழுவுகிறோம். ஆனால், இந்த உலர்த்தும் கருவி, பல மடங்கு கிருமிகளை மீண்டும் திணிப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சரி, கைகளை உலர்த்தவும், கிருமிகளிடம் இருந்து தப்பிக்கவும் வழி தான் என்ன... 'டிஷ்யு டவல்' எனப்படும், மெல்லிய காகிதங்களில் கைகளை ஒற்றி எடுப்பதே பாதுகாப்பான வழி என, ஆய்வாளர்கள் அக்கட்டுரையில் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar - New Delhi,இந்தியா
23-ஏப்-201811:14:27 IST Report Abuse
Rajasekar இது எவனோ திசு பேப்பர் காரன் விற்பனையை அதிகப்படுத்த எடுத்த நடவடிக்கையாகவே தெரிகிறது......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை