பிரதமர் மோடி பாராட்டிய மதுரை இளைஞர் : 'ஸ்டார்ட்டப்' சண்முகபிரியன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடி பாராட்டிய மதுரை இளைஞர் : 'ஸ்டார்ட்டப்' சண்முகபிரியன்

Updated : ஏப் 14, 2018 | Added : ஏப் 14, 2018 | கருத்துகள் (24)
Advertisement
பிரதமர் மோடி பாராட்டிய மதுரை இளைஞர் : 'ஸ்டார்ட்டப்' சண்முகபிரியன்

மதுரை: மதுரை இளைஞர் சண்முக பிரியன் 'முத்ரா' திட்டத்தின் கீழ், வங்கியில் கடன் பெற்று இணைய சேவை நிறுவனம் துவங்கி நடத்தி வருகிறார்.

இவர், ஏப்.,11ல் டில்லியில் பிரதமர் மோடியுடன் நடந்த இளம் தொழில் முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரது பேச்சை கேட்ட மோடி, இவரை பாராட்டி முத்ரா திட்டத்திற்கு துாதுவராக வரவேண்டும் என்று கூறியுள்ளார்

.இது குறித்து சண்முகப் பிரியன் கூறியதாவது:நான் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில், இந்தாண்டு எம்.எஸ்சி., விஷூவல் கம்யூனிகேஷன் முடித்தேன். ஏற்கனவே என் தந்தையின் கேபிள் டிவி நிறுவனத்தை, நானும் இணைந்து கவனித்துவந்தேன். கல்லுாரியில் படிக்கும் போதே, எம்.ஆர்.கே.ஆர்., கம்யூனிகேஷன் என்ற பெயரில் நிறுவனமாக துவங்கி, 2016ல் பிரைவேட் லிமிடட் கம்பெனியாக மாற்றி நடத்தி வருகிறேன். மத்திய, மாநில அரசுகள் 'பைபர் டூ ஹோம்', அதாவது கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் வீடுகளுக்கு பைபர் ஆப்டிக்கல் இணைய சேவை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது.

எனக்கு இணைய சேவை மேல் ஆர்வம் வந்தது.உடனே மத்திய அரசின் முத்ரா திட்டத்தில் வங்கி கடன் பெற்று, இணைய சேவைக்கான உபகரணங்களை வாங்கி, தொழிலை ஆரம்பித்தேன். மதுரை டெலிகாம் வட்டம், சிவகங்கை, நத்தம் வரை உள்ள நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளுக்கு இணைய சேவை வழங்குகிறேன். இதற்காக 8 கட்டுப்பாட்டு அறைகள் அமைத்துள்ளேன், 15 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளேன்.பெரிய நிறுவனங்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை எனது குறைந்த கட்டண அதிவேக இணைய சேவையை பயன்படுத்துகிறார்கள்.டில்லியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி யில், நான் உட்பட 18 இளம் தொழில்முனைவோர் பங்கேற்றோம். அதில் நான், இரண்டாவது நபராக பேசும் போது 'மதுரை வாசியா' என பிரதமர் இந்தியில் கேட்டார். பின்னால் அமர்ந்திருந்த என்னை, அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் அருகில் அமர வைத்து பேசச்சொன்னார்.
''என் கல்லுாரி நிறுவனர் (தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி), ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம், தன்னம்பிக்கை தான் என்னை 'ஸ்டார்ட்டப்' தொழில்முனைவோராக உயர்த்தி இருக்கிறது என்று பேசினேன். உடனே பிரதமர், கல்லுாரி நிறுவனருக்கு வாழ்த்து தெரிவியுங்கள் என்றார்.'முத்ரா கடன் திட்டம் குறித்து, இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, திட்ட துாதுவராக வரவேண்டும்,' என்று பிரதமர் என்னிடம் கூறினார். நான் பேசியது குறித்து, பிரதமர் அவரது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி 'டிவிட்' செய்துள்ளார். இதே உற்சாகத்துடன் விரைவில் உள்ளூர் தொலைகாட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போகிறேன், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rameshs -  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-201800:44:45 IST Report Abuse
rameshs nothing is impossible weather from any place he is the example . young generation should think to their future and avoid to go with politicians
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
14-ஏப்-201822:10:01 IST Report Abuse
Srikanth Tamizanda.. இதெல்லாம் வெறும் கப்சா... காவிரி பிரச்சினைய திசை திருப்ப மோடி செய்யும் சதி..எங்க போச்சு இப்படி புலம்பும் கூட்டம்..ஓ இதுமாதிரி நாட்டுக்கும், இளைஞர்களுக்கும் நல்லது நடக்கும் செய்தி பக்கம் தலை வைக்க மாட்டார்கள் அல்லவா???
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
14-ஏப்-201821:23:19 IST Report Abuse
krishnan என்ன விளம்பரம் கேடிக்கு பொரிக்கு தாமரை மலருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Real INDIAN - Salem,இந்தியா
14-ஏப்-201820:47:37 IST Report Abuse
Real INDIAN Jai HIND.I AM INSPIRED BY YOU BROTHER.WE ARE PROUD TO BE TAMIL INDIAN.
Rate this:
Share this comment
Cancel
14-ஏப்-201819:01:16 IST Report Abuse
RamRamachandren congratulations and my best wishes
Rate this:
Share this comment
Cancel
Karunan - udumalpet,இந்தியா
14-ஏப்-201816:42:01 IST Report Abuse
Karunan போராட்ட தறுதலைங்க இவர் பின்னாடி போய் புத்தி பெறட்டும்
Rate this:
Share this comment
அப்பாவி - coimbatore,இந்தியா
14-ஏப்-201822:56:13 IST Report Abuse
அப்பாவிபோராட்டம் இல்லை எனில் நீங்க மோசடிக்கு அடிமையாகி இருக்க முடியாது. இன்னும் வெள்ளைக்காரனுக்கு தான் அடிமையாக இருந்திருப்பீர்கள்....
Rate this:
Share this comment
Karunan - udumalpet,இந்தியா
15-ஏப்-201807:14:47 IST Report Abuse
Karunanபோராட்ட பிராடுகளுக்கு அவனுக எவ்வளோவோ பரவாயில்லை ......
Rate this:
Share this comment
Cancel
Mekala Ramesh - Mumbai,இந்தியா
14-ஏப்-201816:15:48 IST Report Abuse
Mekala Ramesh கால் காசுக்கும் பிரியாணிக்கும் ஆசை பட்டு தன் வாழ்கையை கெடுத்து கொள்ளாமல் நாட்டுக்கு உபயோகமாக பணி செய்யும் உங்களை போன்றவர்கள் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ நல்லாசிகள்
Rate this:
Share this comment
Cancel
P J Balan - Mumbai,இந்தியா
14-ஏப்-201815:06:30 IST Report Abuse
P J Balan வாழ்த்துகள். வெற்றி உனதே.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-ஏப்-201814:10:15 IST Report Abuse
Cheran Perumal இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் தமிழகத்தின் தலைவிதியை மாற்றுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
14-ஏப்-201814:07:45 IST Report Abuse
சாஸ்தா வாழ்த்துக்கள் நண்பரே, தொய்வில்லாமல் தொடரட்டும் உங்கள் பணி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை