'கர்நாடகாவுக்கு மின்சாரம் வினியோகிப்பதை தடுக்க போராடுவோம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கர்நாடகாவுக்கு மின்சாரம் வினியோகிப்பதை தடுக்க போராடுவோம்'

Added : ஏப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆத்தூர்: ''கர்நாடகாவுக்கு மின்சாரம் வினியோகிப்பதை தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம் நடத்துவோம்,'' என, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் இளங்கோவன் கூறினார்.
சேலம் கிழக்கு மாவட்ட, தே.மு.தி.க., சார்பில், ஆத்தூரில், நேற்று, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, மாவட்ட செயலாளர் இளங்கோவன், நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நீர், விவசாயம் மட்டுமின்றி குடிநீராகவும் உள்ளது. மேட்டூர் அணையில், 38 அடியாக நீர்மட்டம் குறைந்துள்ளதால், சேலம் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, கிராம பகுதிகளுக்கு, 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால், குடிநீர் பஞ்சம் ஏற்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில், மேட்டூர், நெய்வேலி, அம்பத்தூர், தூத்துக்குடி ஆகிய அனல் மின் நிலையங்களிலிருந்து, கர்நாடகாவுக்கு மின்சாரம் வினியோகிப்பதை நிறுத்த வேண்டும். அதற்காக, மேட்டூர் அனல் மின் நிலையம் முன், தே.மு.தி.க., சார்பில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை