காவிரி பிரச்னையில் மத்திய அரசு துரோகம்: மனம் திறந்தார் துணை சபாநாயகர் தம்பிதுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி பிரச்னையில் மத்திய அரசு துரோகம்: மனம் திறந்தார் துணை சபாநாயகர் தம்பிதுரை

Added : ஏப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கரூர்: ''காவிரி பிரச்னையில் மத்திய அரசு துரோகம் இழைத்ததால், தமிழகத்துக்கு நீதி கிடைக்கவே, பாராளுமன்றத்தை முடக்கி போராட்டம் நடத்தினோம்,'' என, அ.தி.மு.க., வைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.


கரூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் ராணுவத்தை பலப்படுத்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் பழனிசாமி அவரிடம் மனு கொடுத்துள்ளார். கறுப்புக் கொடி போராட்டம் என்பது, ஜனநாயக நாட்டில், அவரவர் உரிமை. அனைவரும் ஒன்று சேர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடி வருகின்றனர். ஆனால், வன்முறைக்கு இடம் தரக்கூடாது. கடந்த, 1998ல் பிரதமராக இருந்த வாஜ்பாய், காவிரி பிரச்னையில் தவறு செய்ததால், நான் உள்பட பலர் பதவி விட்டு விலகினோம். ஆனால், தி.மு.க.,வினர் பதவி விலகவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடத்திய சட்டப் போராட்டங்கள் மூலமாகத்தான், காவிரி பிரச்னைக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது. தற்போதும், உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு சாதமாகத்தான் தீர்ப்பளித்துள்ளது. அதை மத்திய அரசு நிறைவேற்றியே ஆக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் விஷயத்தில், மத்திய அரசு துரோகம் செய்தது. தமிழகத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதால், 23 நாள், பாராளுமன்றத்தை முடக்கி போராட்டம் நடத்தினோம். இனிமேல் காவிரி பிரச்னையில், தேசிய கட்சிகளான, காங்., - பா.ஜ., தீர்வு காண முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை