defexpo2018 | திருவிடந்தையை அதிர வைத்த ஜெய்ஹி்ந்த் முழக்கம்...| Dinamalar

திருவிடந்தையை அதிர வைத்த ஜெய்ஹி்ந்த் முழக்கம்...

Updated : ஏப் 14, 2018 | Added : ஏப் 14, 2018
Advertisement

திருவிடந்தையை அதிர வைத்த ஜெய்ஹி்ந்த் முழக்கம்...சென்னை மக்களுக்கு இன்று இரட்டை கொண்டாட்டம்

ஒன்று தமி்ழ் புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை ராணுவ கண்காட்சியினை பார்த்தது ரசி்த்தது இரண்டாவது கொண்டாட்டம்.

கடைசி நாளான்று பொதுமக்கள் கண்காட்சியை பார்க்கலாம் என்றும் பின்னர் நடைபெறும் முப்படை வீரர்களின் சாகச காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம் என்றும் அறிவி்த்திருந்தனர்

கடைசி நாளான இன்று எப்போது வரும் என்று காத்திருந்தது போல சென்னை மக்கம் திருவிடந்தையி்ல் திரண்டனர் மக்கள் கூட்டத்தை பார்த்து கண்காட்சி அமைப்பினர் திக்கு முக்காடிப்போயினர்.

ஆணும் பெண்ணும் குழந்தைகளும் என்று குடும்பம் குடும்பமாய் வந்திருந்தனர் அவர்கள் அனைவரும் வெயிலில் சிரமப்படக்கூடாது என்று தொப்பியும் இலவசமாக வழங்கினர்.

கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பீரங்கி உள்ளீட்ட ராணுவ கருவிகளை அங்குள்ள ஜவான்கள் பொறுமையாக விளக்கினர்.

அடு்த்ததாக கடற்கரையையொட்டி நடந்த முப்படை வீரர்களின் கண்காட்சியினை பொதுமக்கள் பிரமிப்பபுடன் பார்த்தனர்.சுமார் ஒரு மணி நேரம் நிகழ்த்தப்பட்ட சாகசத்தில் சொக்கிப்போயினர்.

வர்ணனையாளர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லி சாகசம் செய்யும் சாரங் ரக ஹெலிகாப்டர் கேப்டன் தமிழர் என்று சொல்ல கூட்டத்தில் ஏக கரகோஷம்.

கடல் போல திரண்ட பொதுமக்களை பார்த்த மகிழ்ச்சியோ என்னவோ வீரர்களும் நீண்ட நேரம் வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை செய்து காட்டினர்.அதிலும் எதிரும் புதிருமாக வந்த நான்கு ஹெலிகாப்டர்கள் செய்திட்ட சாகசங்களை வாழ்க்கையில் யாருமே மறக்கமாட்டர்.

ஒவ்வொரு சாகச நிகழ்வின் போதும் பார்வையாளர்கள் ஜெய்ஹிந்த் கோஷத்தை முழக்கி அந்தப்பகுதியை அதிரவைத்தனர்.

எத்தனை ஆண்டுகளானாலும் மறக்க முடியாத வாழ்க்கையில் மறக்கக்கூடாததாக இந்த ராணுவ கண்காட்சி இருந்தது.

எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in































Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X