கூட்டணி கட்சிகளுடன் ஸ்டாலின் உறவாடுவது ஏன்? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கூட்டணி கட்சிகளுடன் ஸ்டாலின் உறவாடுவது ஏன்?

டெல்டா மாவட்டங்களில், தி.மு.க., தலைமையில், கூட்டணி கட்சிகள் நடத்திய, காவிரி உரிமை மீட்பு பயணத்திற்கு கிடைத்த ஆதரவு, அக்கட்சிகளின் தொண்டர்களுக்கு, மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இதையடுத்து, காவிரி விவகாரம் தொடர்பாக, கூட்டணி கட்சிகளுடன், ஒருங்கிணைந்த போராட்டங்களை தொடர, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

கூட்டணி கட்சிகளுடன் ஸ்டாலின் உறவாடுவது ஏன்?


உற்சாகம் :

காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதால், தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், ஏப்., 5ல் நடத்திய, முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றது.பஸ் கட்டணம் உயர்வு, 'நீட்' தேர்வு விலக்கு தொடர்பாக, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களை விட, காவிரி தொடர்பாக நடத்திய போராட்டங்கள், எழுச்சியை ஏற்படுத்திஉள்ளன. இந்த எழுச்சியை, தேர்தல் வரை கொண்டு செல்ல வேண்டும் என, ஸ்டாலின் கருதுகிறார். அதற்கு, கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்பதையும், அவர் உணர்ந்துஉள்ளார். எனவே தான், காவிரி போராட்டம் குறித்து, கூட்டணி தலைவர்களுடன் கலந்தாலோசித்து,


ஸ்டாலின் முடிவுகளை அறிவிக்கிறார். தற்போது, தி.மு.க., அலுவலகமான அறிவாலயம், கூட்டணி கட்சி தலைவர்கள் அடிக்கடி சந்திக்கும் இடமாக மாறி விட்டது.'இது, கூட்டணி ஒற்றுமையை காட்டுகிறது' என, தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

இது குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

காவிரி உரிமை மீட்பு பயணம், ஸ்டாலின் தலைமையில் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஸ்டாலின்,இதற்கு முன் நடைபயணம் சென்றபோது, எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்த முறை, கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும் பங்கேற்றதால், 'நமக்கு நாமே' பயணத்தை விட, தொண்டர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. அதனால், ஸ்டாலின் உற்சாகம் அடைந்து உள்ளார். எனவே தான், மீட்பு பயணம் முடிந்த கையோடு, சென்னை, அறிவாலயத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தி முடித்து, கவர்னரிடம் மனு அளித்தனர்.

அழைப்பு போகலாம் :

அடுத்த மாதம், 3ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில், காவிரி வழக்கு விசாரணையின் முடிவு தெரிந்த பின், அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவது குறித்து, கூட்டணி தலைவர்களிடம், ஸ்டாலின் ஆலோசித்துள்ளார்.கவர்னர் மூலமாக, பிரதமர் மோடியை சந்திக்கவும் காய் நகர்த்துகிறார். அதற்கு, அனுமதி கிடைக்கவில்லை என்றால், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன், டில்லி சென்று போராட்டம் நடத்தும் திட்டத்தில் இருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை, தி.மு.க., கூட்டணி கட்சிகள், ஒரு பக்கம் போராடிக்கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம், தேர்தலுக்கு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியிலும், ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். பா.ம.க., நடத்திய, 'பந்த்' போராட்டத்திற்கு, தி.மு.க., ஆதரவு அளித்துள்ளதால், அக்கட்சியும் நெருங்கி வந்துள்ளது.

Advertisement

அடுத்தகட்ட போராட்டம் நடத்தும் போது, பா.ம.க.,வுக்கும் அழைப்பு போகலாம். காவிரி விவகாரம் மட்டுமல்ல; மத்திய - மாநில அரசுகளின், மக்கள் விரோத செயல்களை கண்டித்து, கூட்டணி கட்சிகளின் துணையுடன் போராட்டங்கள் நடத்தி, மக்கள் மத்தியில், வெற்றி கூட்டணி என்ற பிம்பத்தை ஏற்படுத்த, ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

போஸ்டரில் உதயநிதி!


l மறைந்த முதல்வர், ஜெயலலிதாவுக்கு, 'காவிரி செல்வி' விருது அளித்த, விவசாய சங்க மூத்த தலைவர், மன்னார்குடியைச் சேர்ந்த ரங்கநாதன், ஸ்டாலினுடன் நீண்ட துாரம் நடந்து வந்து, ஆதரவு அளித்துள்ளார்l தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த பயணத்தின் போது, பள்ளி மாணவியரை சந்தித்த ஸ்டாலின், ஒரு மாணவியிடம், 'நான், எதற்கு வந்திருக்கேன் தெரியுமா' எனக் கேட்டார்; உடனே, அந்த மாணவி, 'காவிரிக்காக' என, பதிலளித்ததும், அவரை பாராட்டினார்l திருவாரூர் மாவட்டத்தில், ஸ்டாலினை சந்தித்த மக்கள், 'கருணாநிதி நன்றாக இருக்கிறாரா?' என, விசாரித்துள்ளனர். அவர்களிடம், கருணாநிதியின் உடல் நலம் குறித்து, ஸ்டாலின் விளக்கிஉள்ளார்

Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
18-ஏப்-201804:55:35 IST Report Abuse

meenakshisundaramAbdul கலாம் சொன்னது போல ஸ்டாலின் கனவு காண்கிறார் ,இப்போ அவரையே அவர் அப்பாவையே எழுப்ப கழகத்திலோ அல்லது கூட்டணியிலோ எந்த ஆளும் இல்லை.தேர்தல் நேரத்தில்தான் இந்த கூட்டணி (என்று சொல்லப்படும்) நெல்லிக்காய்களை போல சிதறுவார்.ஸ்டாலின் அது நேரக்கூடாது என்றுதான் நாளொரு போராட்டம் என்று வழி நடத்துகிறார்.போதாதர்ற்கு 'விருது பட்டி சனியன் 'போல கலிங்கப்பட்டி வீரன் வேற கூட இருக்கிறார்.என்னதை சொல்ல?

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
15-ஏப்-201820:04:23 IST Report Abuse

siriyaarStalin trying his best to become CM, but people always remembering your family cheats soon after aee your face. If DMK wants to come to power first to remove all karuna family from it. They may keep one MMS like people for one term.

Rate this:
Tamilselvan - Chennai,இந்தியா
15-ஏப்-201818:19:12 IST Report Abuse

Tamilselvanசுடலை என்ன குட்டிக்கரணம் போட்டாலும் எதிர்க்கட்சி தலைவர் கூட ஆக முடியாது . காவிரி விகாரம் இவ்வளவு மோசமானதற்கு முதல் காரணம் மஞ்சள் துண்டு கும்பல் என்பது எல்லோருக்கும் தெரியும். தேர்தல் சமயத்தில் கூட்டணி கட்சிகள் சிதறும். சுடலையின் குளறுபடிகளை புட்டு புட்டு வைப்பார்கள்.

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X