தமிழகத்தில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள் மறுப்பு:   தெலுங்கானா, ஆந்திரா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகத்தில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள் மறுப்பு:   தெலுங்கானா, ஆந்திரா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு

காவிரி போராட்டம் காரணமாக, தமிழகத்தில், தொழில் துவங்க மறுப்பு தெரிவித்து, வேறு மாநிலங்களுக்கு, முதலீட்டாளர்கள் ஓட்டம் பிடிக்கும் தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள் மறுப்பு:   தெலுங்கானா, ஆந்திரா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு

தொடர் போராட்டத்தால், வெளிநாட்டு நிறுவனங்களின், பல கோடி ரூபாய் முதலீடு, 'அவுட்'டானது. இதை சாதகமாக பயன்படுத்தி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, தெலுங்கானா, ஆந்திர மாநிலங்கள், சிவப்பு கம்பளம் விரித்து, வரவேற்பு அளிக்கத் துவங்கி உள்ளன.ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழகம், போராட்ட களமாக மாறி வருகிறது. ஜெ., இருந்தபோது, இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர்கள் எல்லாம், இப்போது, சாலையில் நின்று, போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில், தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், ஜல்லிக்கட்டு போராட்டமாக இருந்தது.இப்போது, காவிரி விவகாரத்தில், தமிழகமே போராட்ட மயமாகி வருகிறது. தமிழகம் வந்த பிரதமருக்கு, கறுப்பு கொடி, கறுப்பு பலுான் என, எதிர்க்கட்சிகளும், சில அமைப்புகளும் எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கின. இதில், தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்து உள்ளதாக, அக்கட்சிகளும், அமைப்புகளும் கூறி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங் களால், மாநிலத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.டில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: 'மே, 3க்குள், காவிரி மேலாண்மை வாரியம் அல்லது ஏதேனும் ஒரு செயல் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம்

உத்தரவிட்டுள்ளதோடு, மத்திய அரசை கடுமையாக கண்டித்துள்ளது. அதனால், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், வாரியம் அமைக்க, அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இனி, தமிழகத்திற்கு, ஜூன் மாதத்தில் தான் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும். அதற்குள் வாரியம் அமைக்கப்பட்டு விடும்.அப்படியிருக்கும் போது, அரசியல் ஆதாயத்திற்காக, தினமும் போராட்டம் நடத்தி, சில கட்சியினர் பொது மக்களை வாட்டி வதைக்கின்றனர். மேலும், போராட்டங்களால், தமிழகத்திற்கு வர வேண்டிய, வெளிநாட்டு முதலீடுகளிலும்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் சில, தங்கள் தொழிற்சாலைகளை, விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருந்தன.தற்போது நடந்து வரும் போராட்டங்களால், அவை, விரிவாக்க திட்டத்தை நிறுத்தி விட்டன. மிகப்பெரிய, ஏழு வெளிநாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக, நிதி அமைச்சகத்திடம் தெரிவித்திருந்தன. தற்போது, பின்வாங்கி விட்டன.தமிழகம் என்றாலே போராட்டம் என்றாகி விட்டது. துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலையை மூட, போராட்டம் நடத்துகின்றனர். 'அரசின் அனுமதியோடு ஆரம்பித்தாலும், போராட்டங்களால் பிரச்னை வருகிறது. எனவே, வேறு மாநிலத்திற்கு செல்கிறோம். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள், எங்களை வரவேற்க தயாராக உள்ளன' என, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், நிதி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளன. உரிமை மறுக்கப்பட்டால், போராட்டத்தில் இறங்க வேண்டியது தான். அதே சமயம், மாநிலத்தின் முன்னேற்றத்தையும், கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

தமிழிசை அளித்த பேட்டி:


எஸ்.சி., - எஸ்.டி., சட்டம் நீர்த்து போய் விடக்கூடாது என்பதை, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தி உள்ளது. ஆனால், மத்திய அரசுக்கு எதிராக,

Advertisement

போராட்டம் நடத்துகின்றனர். தமிழக மக்கள், பிரதமர் மோடி பக்கம் உள்ளனர். ராணுவ கண்காட்சியை பார்க்க, லட்சக்கணக்கான மக்கள் சென்றுள்ளனர். போர்க் கப்பலை பார்க்க, முதல் நாளில் மட்டும், 25 ஆயிரம் பேர் வந்தனர். இது, பிரதமர் பின்னால், தமிழக மக்கள் உள்ளதை காட்டுகிறது.ஆனால், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் கண்காட்சியை, துவக்கி வைக்க வந்த, பிரதமர் மோடியை, கடுமையாக விமர்சித்து, பல நிகழ்ச்சிகளை, சில கட்சிகள் நடத்தின. எனினும் அவர், தமிழக மக்களுக்கு, தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்களோடு, எங்கள் கட்சி உள்ளது. தமிழகம், இப்படி போராட்ட களமாக இருந்தால், யாரும் முதலீடு செய்ய, தமிழகத்திற்கு வர மாட்டார்கள். தமிழக மக்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்காது. தமிழகம், எந்த வளர்ச்சி பாதைக்கும் போக முடியாது. சிலர் செய்யும் வஞ்சகத்தால், இது நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் விளக்கம்! :

தொழில் துறையினர் ஓட்டம் குறித்து, அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:ஜெ., இருந்தபோது, சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, சென்னையில் நடத்தப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது.
இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, 2019 ஜனவரியில் நடைபெற உள்ளது.தொழில் முனைவோர், தொழில் துவங்க விரும்பும் மாநிலத்தில், அமைதி உள்ளதா, அடிப்படை கட்டமைப்பு வசதி உள்ளதா என, பார்ப்பர். இவை அனைத்தும், தமிழகத்தில் உள்ளன. இங்கு தொழில் துவங்க, ஒற்றை சாளர முறையில், அனுமதி வழங்கப்படுகிறது. சட்டம் - ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படுகிறது. தொடர் போராட்டங்கள் காரணமாக, தமிழகத் திற்கு தொழில் முதலீடுகள் குறைய வாய்ப்பு உள்ளதாக, பா.ஜ., தலைவர் தமிழிசை கூறுவது அபத்தமானது. மாநிலம் குறித்து தவறான கருத்தை, அவர் கூறக் கூடாது. முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகம் முன்னணியில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (178)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
20-ஏப்-201820:35:26 IST Report Abuse

balஇந்த சுடலையால் தான் நோக்கியா மூடப்பட்டது...திராவிடர்கள் திருந்த வேண்டும்...தொழில் சங்கங்கள் கூடாது....அதற்கு மேல் எடப்பாடி மற்றும் பழனி ஹோட்டல் முதலாளி மாதிரி இருக்கின்றனர்....படிப்பறிவு இருந்தால் தொழில் வளர்ச்சிக்கும் பாடுபடுவர். அதுதான் இல்லையே...நமஸ்காரம் பண்ணும் கும்பல்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
21-ஏப்-201804:09:19 IST Report Abuse

Manianசுடலையான் கட்சி கூண்டோடு அடித்து நொறுக்க படவேண்டும். நைனா அடித்த கொள்ளையில் இவர் வாழ்வு வளம், மக்கள் வாழ்வு டாஸ்மார்க் குளம்....

Rate this:
sam - Doha,கத்தார்
21-ஏப்-201809:10:28 IST Report Abuse

samஎப்பா உங்களுக்கு எல்லாம் ஸ்டாலின் தான் கண்ணில் தெரிகிறார். இப்போது யார் ஆட்சி செய்கிறார்கள், அவர்கள் என்ன செய்தார்கள் என்று பேசுகிறீர்களா....

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஏப்-201808:00:27 IST Report Abuse

Bhaskaranநம்மவர்களுக்கு விலையில்லா அரிசி பொங்கல் வேட்டிசேலை தாத்தா தந்த டிவியில் மானாட மயிலாட இதுபோதும் தொழில் ஆரம்பித்தாலென்ன ஆரம்பிக்காவிட்டாலென்ன

Rate this:
Ram Kumar - pondicherry,இந்தியா
20-ஏப்-201807:48:54 IST Report Abuse

Ram KumarALL OF YOU PLEASE UNDERSTAND, THE FIRST THING ANY TERRORIST OUTFIT WANTS IS UNEMPLOYED YOUTHS. THEN ONLY THEY CAN BRAIN WASH YOUTHS FOR CHEAP MONEY. SOME POLITICIANS ALSO HELP SUCH A SITUATION. I STRONGLY FEEL THERE ARE HIDDEN HANDS BEHIND ALL SUCH TRUMPETED OPPOSITION TO ANY THING RIGHT FROM KOODANKULAM POWER PLANT/ OIL EXPLORATION/SETTING UP FACTORY, WIND POWER ENERGY ETC. SUCH STRUGGLES ARE LY DONE BY RELIGIOUS HEADS. JUST TO COVER UP THIS THEY ALSO DO JALLIKATTU AND CAUVERY STRUGGLE, TO GIVE A TAMIL COLOR PAINT TO ALL SUCH STRUGGLES. SAME VESTED GROUPS WILL ALSO OPPOSE AGRICULTURE IN THE NAME OF ANTI CHEMICAL USE IN AGRI. AND ENVIRONMENT. EVERY BODY WANTS FOOD, HOUSING, MONEY, 2 WHEELER, 4 WHEELER. POLITICAL PARTIES DISTRIBUTE FREE 2 WHEELER, THE DAY IS NOT FAR OFF WHEN THEY MAY GIVE FREE CAR IN TAX PAYERS MONEY. BUT, THESE PEOPLE DO NOT WANT OIL EXPLORATION, DO NOT WANT FACTORIES, DO NOT WANT AGRICULTURAL PRACTICES FOR LARGE OUTPUT OF CEREALS TO FILL ALL STOMACH. WHERE IS THE SOLUTION?. A BENOVALENT GOVT. SHOULD WAKLE UP AND SHOULD NOT ALLOW SUCH A SITUATION LEADING TO MORE UN-EMPLOYMENT. BEWARE, BEWARE, BEWARE. SAME SORT OF UNEMPLOYED YOUTHS LED TO A CATASTROPHIC EFFECT IN SYRIA/ NORTH SRI LANKA AND KASHMIR. NO CORPORATE WANTS TO INVEST IN THESE PLACES. NOW, MANY CORPORATES ARE GOING AWAY FROM TN, BEWARE THIS WILL ONLY HELP ISIS/TALIBAN/MAOIST/ ETC. YOUTHS OF TN PLEASE THINK, PLEASE DO NOT DESTROY YOUR OWN LAND AND LIFE....

Rate this:
Thennavan - San francisco,யூ.எஸ்.ஏ
15-ஏப்-201823:27:11 IST Report Abuse

Thennavanசிறப்பு, இதுவே தேவை. தமிழர்கள் அடிமை ஆகாமல், தப்பிக்க நல்ல தருணம்.

Rate this:
மேலும் 172 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X