தாம்பூலத்தட்டுடன் அழைப்பிதழ் : ஆண்டு விழாவில் அசத்தும் அரசுப்பள்ளி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பூலத்தட்டுடன் அழைப்பிதழ் : ஆண்டு விழாவில் அசத்தும் அரசுப்பள்ளி

Added : ஏப் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
arokiya selvaraj,Chevalpatti Middle School,Government School,தாம்பூலத்தட்டுடன் அழைப்பிதழ், அரசுப்பள்ளி அழைப்பு, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, எஸ்.எஸ்.கோட்டை, தலைமையாசிரியர் ஆரோக்கியசெல்வராஜ், எஸ்.செவல்பட்டி நடுநிலைப்பள்ளி , 
Government School call, Sivagangai District, Singampunari, SS Kottai, Head master arokiya selvaraj, S. Chevalpatti Middle School,

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, மாணவர்களின் பெற்றோர்களுக்கு தாம்பூலத்தட்டுகளை வழங்கி ஆண்டு விழாவுக்கு வருமாறு அரசுப்பள்ளி அழைப்பு விடுத்துள்ளது.எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள எஸ்.செவல்பட்டி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவை ஏப்.17 ம் தேதி கல்வி கலைத் திருவிழாவாக நடத்த அப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு, அழைப்பிதழுடனும் தாம்பூலத்தட்டையும் மாணவர்களிடம் கொடுத்தனுப்பியுள்ளனர்.
தலைமையாசிரியர் ஆரோக்கியசெல்வராஜ் கூறியதாவது: எங்கள் பள்ளியின் அனைத்து நிகழ்வுகளுக்கும் மக்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும். இவ்வொன்றியத்திலேயே 250 கல்விப்புரவலர்களை கொண்ட முதன்மைப்பள்ளியாக இப்பள்ளி விளங்குகிறது. எனவே அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் செய்துள்ளோம். இது பள்ளியின் வளர்ச்சிக்கு மேலும் உதவும், என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-ஏப்-201818:12:39 IST Report Abuse
Kuppuswamykesavan அட்ராசக்கை, அட்ராசக்கை, மிக அருமை ஆசிரியர்களே, புதுமைதான், பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை