காவிரி விவகாரத்தில் விளம்பரம் தேடும் ஸ்டாலின் அமைச்சர் காட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவிரி விவகாரத்தில் விளம்பரம் தேடும் ஸ்டாலின் அமைச்சர் காட்டம்

Added : ஏப் 15, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:''காவிரி மேலாண்மை வாரியம் உறுதியாக அமையும். கவர்னரை சந்திக்க அனுமதி கேட்கும் ஸ்டாலின் விளம்பரத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்'' என அமைச்சர் உதய குமார் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: காவிரி பிரச்னையில் உரிய கெடுவிற்குள் மேலாண்மை வாரியம் அமைக்காததால் மறுநாளே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அரசு தொடுத்தது. சட்டப் போராட்டத்தை முதல்வர் பழனிசாமி சரியாக நடத்தி வருகிறார். எனவே காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயமாக அமையும். இதில் முதல்வர் வெற்றி பெறுவார்.
இதனால் கிடைக்கும் செல்வாக்கை திசை திருப்பவே, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகிறார்கள். ஒட்டு மொத்த தமிழக மக்கள் சார்பில் பிரதமரிடம் மனுவை முதல்வர் கொடுத்துள்ளார். அதன் பிறகும் பிரதமரை சந்திக்க எதிர்க்கட்சியினர் அனுமதி கேட்கின்றனர். இது நாடகமே தவிர வேறொன்றும் இல்லை. விளம்பரத்துக்காக இதுபோன்ற செயல்களில் ஸ்டாலின் ஈடுபடுகிறார், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JANANI - chennai,இந்தியா
15-ஏப்-201817:57:45 IST Report Abuse
JANANI ellathaiyum vechu arasiyal aathaayam thedurathu thaan stalin kku velaiye..
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
15-ஏப்-201817:53:03 IST Report Abuse
Sundaram காவிரி பிரச்னையில ஸ்டாலின் அரசியல் செய்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை