தோனி அதிரடி வீண்; சென்னை அணி போராடி தோல்வி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தோனி அதிரடி வீண்; சென்னை அணி போராடி தோல்வி

Updated : ஏப் 16, 2018 | Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (8)
Advertisement
IPL2018,Chennai Super Kings,Kings XI Punjab, சென்னை அணி தோல்வி, தோனி அதிரடி, பஞ்சாப் அணி,  சென்னை அணி கேப்டன் தோனி,பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின்,கிங்ஸ் XI பஞ்சாப்,ஐபிஎல்2018,
சென்னை சூப்பர் கிங்ஸ், இந்திய பிரீமியர் லீக் 2018,  Indian Premier League 2018 , Dhoni, Punjab team, Chennai team captain Dhoni, Punjab captain Captain Ashwin,  CSK, IPLT20 ,IPL Cricket,VIVOIPLT20,

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. மொகாலியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணிக்கு கெய்ல், லோகேஷ் ராகுல் 'சூப்பர்' துவக்கம் தந்தனர். ஹர்பஜன் வீசிய 4வது ஓவரில் ராகுல் இரண்டு பவுண்டரி அடித்தார். சகார் பந்துவீச்சில் கெய்ல் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி விளாசினார். புயல் வேகத்தில் ரன் குவித்த இவர் 22 பந்தில் அரை சதம் அடித்தார். ராகுல் 37 ரன்களில் அவுட்டானார். வாட்சன் 'வேகத்தில்' கெய்ல் (63) ஆட்டமிழந்தார். தாகிர் 'சுழலில்' மயங்க் அகர்வால் (30), பின்ச் (0) சிக்கினர். யுவராஜ் 20 ரன்களில் திரும்பினார்.

கேப்டன் அஷ்வின் 14 ரன்கள் எடுத்தார். பிராவோ பந்தில் கருண் நாயர் (29) அவுட்டானார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரூ டை (3) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர், தாகிர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அபாரமாக ஆடிய தோனி (79) அரைசதம் கடந்தார். அம்பதி ராயுடு (49) ஓரளவு கைகொடுத்தார். பஞ்சாப் அணியில் ஆண்ட்ரூ டை 2 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201810:29:37 IST Report Abuse
Yaro Oruvan ஜடேஜா ஒரு ஆள் போதும்பா.. வைகோவோட சேந்தவன் போல்ருக்கு.. லாஸ்ட் ஓவர்ல எறக்கிவிட்டாலும் நின்னு நிதானமா ஒரு ரன் எடுத்துர்ரான்.. ரொம்ப தெறமையானவன்.. தோணி ஜடேஜாவுக்கு எம்புட்டு நாளைக்குத்தான் தடவி விட்டுக்கிட்டே இருப்பார்னு தெரியல.. சகிக்கல.. தோணியோட ஜடேஜா முன்னிலை பிடிவாதம் தோல்விக்கு காரணம்.. அப்டி இல்லன்னா இது கண்டிப்பா பிக்சிங்.. மேட்ச் பாத்த கொழந்த சொல்லுமப்பா.. ஜடேஜாவுக்கு பதிலா பிராவோ வந்துருக்கணும்னு.. தோணி - போதுமப்பா.. முடியல.
Rate this:
Share this comment
Cancel
Chandrasekar P M - chennai,இந்தியா
16-ஏப்-201809:57:12 IST Report Abuse
Chandrasekar P M மகிழ்ச்சி
Rate this:
Share this comment
Cancel
Rahim - Chennai,இந்தியா
16-ஏப்-201808:40:10 IST Report Abuse
Rahim பாவாடை டமிழனோட வயித்தெரிச்சலோ என்னவோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை