டேராடூன் : நாடு முழுவதும், காட்டுத் தீ எச்சரிக்கை தொழில் நுட்பத்தை, எப்.எஸ்.ஐ., எனப்படும், இந்திய வன அளவை துறை, முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.
இதுகுறித்து, எப்.எஸ்.ஐ., இயக்குனர், சாய்பால்தாஸ் குப்தா நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும், காட்டு தீ பற்றிய எச்சரிக்கையை அளிக்கும் தொழில்நுட்பம், முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தானியங்கி முறை:
காட்டுத் தீ ஏற்படுவதற்கு, 10 அல்லது, 12 வாரங்களுக்கு முன்பே, அது தொடர்பான
எச்சரிக்கையை, புதிய தொழில் நுட்பத்தில் பெற முடியும். காட்டு தீ தொடர்பான, எப்.எஸ்.ஐ.,யின் புதிய தொழில்நுட்பம், காடுகளில் இரவில் தீ பற்றுவது உட்பட அனைத்து எச்சரிக்கைகளையும், தானியங்கி முறையில் தெரிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
எப்.எஸ்.ஐ., துணை இயக்குனர், விக்ரம், நிருபர் களிடம் கூறியதாவது: காட்டுத் தீ ஏற்பட்டால், அது தொடர்ந்து எரிவதற்கு தேவையான எரிபொருள் மற்றும் உகந்த தட்பவெப்பநிலை ஆகியவை இருந்தால் மட்டுமே, காட்டின் பிற பகுதிகளில் வேகமாக பரவும்.
பருவமழை:
தீ எரிவதற்கு உகந்த சூழல், காட்டில் நிலவினால், விரைவாக பரவி, கட்டுப்படுத்த முடியாத பெருந்தீயாக உருவெடுக்கும். இதனால், பெரியளவில் உயிர்களுக்கும், சொத்துக்கும் இழப்பு ஏற்படும். காட்டுத் தீ ஏற்படுவதற்கு உகந்த தட்பவெப்ப நிலை
நிலவும் பருவம், 'தீ பருவம்' எனப்படும். கோடைக் காலத்தில், தீப்பருவம் அதிகளவில் உண்டாகிறது. பருவமழை பெய்யத் துவங்கும்போது, தீப் பருவம் முடிவுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில், தமிழகத்தில் குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, 20க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த விபத்தை அடுத்து, எச்சரிக்கை தொடர்பான தொழில்நுட்பம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக, வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (4)
Reply
Reply
Reply
Reply