மழலையர் பராமரிப்பக நிதி நிறுத்தியதால் திண்டாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழலையர் பராமரிப்பக நிதி நிறுத்தியதால் திண்டாட்டம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை: அங்கன்வாடி மையங்களோடு செயல்படும் மழலையர் பராமரிப்பகங்களுக்கு, நிதி ஒதுக்காததால், நான்கு மாதங்களாக ஊதியமின்றி பணிபுரிவதாக, ஊழியர்கள் புலம்புகின்றனர்.தமிழகத்தில், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் குழந்தைகளை பராமரிக்க, சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட, 15 மாவட்டங்களில், 211 மழலையர் பராமரிப்பகங்கள், 2015ல் அமைக்கப்பட்டது. அங்கன்வாடி மையங்களோடு இணைந்து செயல்படும், இந்த மழலையர் பராமரிப்பகங்களுக்கு, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த, 2.௩௧ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இக்குழந்தைகளின் சிற்றுண்டிக்கு, தினமும் தலா ஆறு ரூபாய் அளிக்கப்பட்டது.முழுக்க மாநில அரசால் தொடங்கப்பட்ட இத்திட்டத்துக்கு, சிற்றுண்டி நிதி முறையாக அளிக்கப்படவில்லை. டிசம்பர் மாதத்தோடு, ஊழியர்களுக்கும் மாதச்சம்பளம் வழங்கப்படவில்லை.தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலர் டெய்சி கூறியதாவது:முன்னோடி திட்டமாக கருதப்பட்ட, மழலையர் பராமரிப்பகங்களுக்கு, கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை. முழுமையாக நிதி ஒதுக்கவில்லை. குழந்தைகளின் எண் ணிக்கை குறைந்ததை காரணம் காட்டி, இத்திட்டத்தை முடக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் பணிபுரிவோருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மழலையர் பராமரிப்பகங்கள் மூடுவதாக இருந்தால், ஊழியர்களுக்கு அங்கன் வாடிகளில், மாற்றுப்பணி வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஏப்-201808:29:21 IST Report Abuse
Bhaskaran மழலையர் பள்ளிகளில் சிக்கனம் பார்ப்பதா காமராசர் மதிய உணவுத்திட்டம் கொண்டுவரும்போது நிதி இல்லையென்றால் மக்களிடம் போய் கேட்பேன் என்று கூறினார் அரசுவுடனே மழலையர் பள்ளிகளுக்கு நிதியளிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை