லஞ்ச விவகாரத்தில் சிக்கியுள்ள உதவி கமிஷனரிடம் கிடுக்கிப்பிடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச விவகாரத்தில் சிக்கியுள்ள உதவி கமிஷனரிடம் கிடுக்கிப்பிடி

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
லஞ்ச விவகாரத்தில் சிக்கியுள்ள   உதவி கமிஷனரிடம் கிடுக்கிப்பிடி

சென்னை: லஞ்ச விவகாரத்தில் சிக்கியுள்ள, உதவி கமிஷனர், கமீல் பாஷாவிடம், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் உள்ள, ஜெ.ஜெ., நகர் காவல் நிலைய கட்டடத்தில், திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கமீல் பாஷா, உதவி கமிஷனராக உள்ளார். இவர், கஞ்சா வியாபாரிகள், போலி மதுபானம் விற்போர் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு நடத்துவோரிடம், மாமூல் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குவிந்தன : மேலும், திருமங்கலம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நள்ளிரவு வரை உணவகங்கள் நடத்தவும், 'டாஸ்மாக்' பார்களில் மது விற்கவும், லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி அளிப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு, புகார்கள் குவிந்தன. உடன், இவரது அலுவலகத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார், ரகசியமாக கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், இரவு, 11:00 மணியளவில், கட்டட ஒப்பந்தக்காரர், செல்வம் என்பவர், உதவி கமிஷனர், கமீல் பாஷாவை, அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார், கமீல் பாஷாவின் அறைக்குள் நுழைந்து, அவரது மேஜையை திறந்து பார்த்தனர். அதில், 2.50 லட்சம் ரூபாய் இருந்தது. கட்டட ஒப்பந்தக்காரர், செல்வமும், 2.58 லட்சம் ரூபாய் வைத்திருந்தார்.இந்தப் பணம் குறித்து, இருவரிடமும் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும், கமீல் பாஷா மற்றும் செல்வம் ஆகியோருக்கு, உடல் முழுவதும் வியர்த்து கொட்டியது. அதேநேரத்தில், அங்கு பணியில் இருந்த, எஸ்.ஐ., பாண்டியராஜன், போலீஸ்காரர்கள், லோகிதாஸ், சிலம்பரசன் மற்றும் தேவேந்திரன் ஆகியோரிடமும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களும், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தொடர் விசாரணையில், நிலப்பிரச்னையை தீர்த்து வைக்க, செல்வத்திடம் லஞ்சமாக, எட்டு லட்சம் ரூபாய் பேரம் பேசி, அதில், முன்பணமாக, 2.50 லட்சம் ரூபாயை, கமீல் பாஷா வாங்கியது தெரியவந்தது.இதையடுத்து, கமீல் பாஷாவுக்கு சம்மன் வழங்கிய, லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது சொத்து பட்டியலை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளாரா என்ற கோணத்திலும், விசாரணை நடந்து வருகிறது.
சலசலப்பு : போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'கமீல் பாஷாவிடம் விசாரணை நடக்கிறது. அவர் மீது, வழக்கு பதிவு செய்யப்படவில்லை. முழுமையான விசாரணைக்கு பின், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். சென்னையில், பொரு ளாதார குற்றப்பிரிவில் பணியாற்றிய, டி.எஸ்.பி., முகமது பலுலுல்லா, 'குரோ ரிச் பவுண்டேஷன்' என்ற, நிறுவனத்தின் உரிமையாளர்களிடம், 19 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற விவகாரத்தில், சில தினங்களுக்கு முன் சிக்கினார். அவர் மீது, வழக்கு பாய்ந்துள்ள நிலையில், கமீல் பாஷாவும் லஞ்ச விவகாரத்தில் சிக்கியிருப்பது, காவல் துறையினரிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MaRan - chennai,இந்தியா
17-ஏப்-201810:53:07 IST Report Abuse
MaRan என்னமோ இதான் முதல் தடவை காவல் துறை லஞ்ச வழக்கில் சிக்குவது போல பில்டப் எதற்கு, மாட்டினார்,, தண்டனை கொடுங்கள் அவ்ளோதான்,,ரெண்டு நாள்ல மறந்துடுவோம்,, பான்மசாலால நூறுகோடி லஞ்சம் வாங்குன IPS அதிகாரிகளை மறந்தமாதிரி
Rate this:
Share this comment
Cancel
WE ARE INDIAN - Chennai,இந்தியா
16-ஏப்-201820:22:28 IST Report Abuse
WE ARE INDIAN புடிச்சு தூக்கில போடுங்க. யூனிபோர்ம் போட்டு தவறுசெய்தால் 10 பங்கு தண்டனை தர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
16-ஏப்-201812:46:05 IST Report Abuse
christ இவனை போன்று லஞ்ச பேய்கள் காவல்துறையில் ஏராளமாக உள்ளது . கடைகளில் இரவு நேரம் திறந்து வைப்பதை கண்டும்காணாமலும் இருப்பதற்கு அந்த கடைகளில் பொருட்களை வாங்கி கொண்டு காசு ஏதும் கொடுக்காமல் செல்லுவதை பார்க்கலாம். இருசக்கர வாகன ஒட்டிகளிடம் சோதனை என்கிற பெயரில் லஞ்சம் வாங்கி கொண்டு கண்டும் காணாமல் இருப்பதை காணலாம் . காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றால் பொதுமக்களை மரியாதை இல்லாமல் பேசுவதையும், அவர்களிடம் ஓசியில் xerox காப்பி எடுத்து வரச்சொல்லுவதும் ஓசியில் டீ,காபி வாங்கி குடிப்பதும் நடந்து கொண்டு உள்ளது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X