மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கடலுார்: லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள, விழுப்புரம் மாவட்ட பதிவாளரின் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று, ஆறு மணி நேரம் சோதனை நடத்தினர்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த எல்லப்பன்பேட்டையைச் சேர்ந்தவர் குமரசேன், 42; பதிவுத் துறையில், விழுப்புரம் மாவட்ட பதிவாளர். தற்போது, கடலுார், வெளிச்செம்மண்டலம், ராஜிவ்காந்தி நகரில், புதிதாக வாங்கிய வீட்டில் வசித்து வருகிறார். இவர், சார் பதிவாளர்களிடம் மாதந்தோறும் பணம் பெற்று வருவதாக, கிடைத்த தகவலின்படி, இவரது அலுவலகத்தில், நேற்று முன்தினம், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத, 92 ஆயிரத்து, 630 ரூபாயை கைப்பற்றினர். தொடர்ந்து, குமரேசனின் வீட்டில், நேற்று காலை, 8:00 முதல், மதியம், 2:00 மணி வரை, கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். குமரேசன் வீட்டில் இல்லாததால், அவரது மனைவி முன்னிலையில் சோதனை நடத்தினர். ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை. பின், அவரது வீட்டை அளந்து, மதிப்பீடு செய்தனர். திருப்பதி சென்றுள்ள குமரேசன் திரும்பி வந்ததும், அவரது வங்கி லாக்கரை சோதனை செய்ய, போலீசார் முடிவு செய்துஉள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஏப்-201810:43:22 IST Report Abuse
Bhaskaran லஞ்சம் வாங்கியதில் கடவுளுக்கு உண்டான பங்கினை உண்டியலில் போடுவதற்கு திருப்பதி சென்று உள்ளாரோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை