போர் கப்பல்களை காண குவிந்த மக்கள்; 3 நாட்களில் 71 ஆயிரம் பேர் பார்த்தனர் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
போர் கப்பல்களை காண குவிந்த மக்கள்
3 நாட்களில் 71 ஆயிரம் பேர் பார்த்தனர்

சென்னை : சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல்களை, மூன்று நாட்களில், 71 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.

போர் கப்பல்,குவிந்த,மக்கள்,3 நாட்களில்,71 ஆயிரம் பேர்,பார்த்தனர்சென்னையை அடுத்த திருவிடந்தையில், 11ம் தேதி துவங்கிய, ராணுவ தளவாட கண்காட்சி, 14ம் தேதி நிறைவடைந்தது. சென்னை துறைமுகத்தில், 13ம் தேதி, நான்கு போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டன. மூன்று நாட்கள் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களை பார்வையிட, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். 14 மற்றும் 15ம் தேதிகளில், ஐந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.


சென்னை, தீவுத்திடலில், பார்வையாளர்களின் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டது. மேலும், அடையாள அட்டை நகல் எடுப்பதற்காக, 10 ஜெராக்ஸ் இயந்திரங்களும் தற்காலிகமாக அமைக்கப்பட்டன. கடந்த மூன்று நாட்களும், ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து, கப்பல்களை பார்வையிட்டனர்.


தீவுத்திடலில், நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். தீவுத்திடலில் இருந்து, காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 57 பேருந்துகள் மூலம், பொதுமக்கள், துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, சாயாத்ரி, ஐராவத், காமோத்ரா, குக்ரி, சுமித்ரா, கிர்ச் ஆகிய, ஐந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால், கூட்டம் காரணமாக, ஒருவர், ஒரு கப்பலை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்களில், மொத்தம், 71,410 பேர் கப்பல்களை பார்வையிட்டுள்ளனர்.

Advertisement

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கப்பல்களை பார்க்க காத்திருந்த சென்னை வாசிகளின் ஆர்வத்தைக் கண்டு, கடற்படையினர் வியந்தனர்.


''ராணுவ தளவாட கண்காட்சி மற்றும் கடற்படை கப்பல்களைப் பற்றி தெரிந்துகொள்ள, சென்னை வாசிகள் குடும்பத்துடன் வந்தது, மகிழ்ச்சி அளித்தது. அவர்களுக்காக, போக்குவரத்து, குடிநீர், மருத்துவ வசதிகளை, நாங்கள் சிறப்பாக செய்து கொடுத்துள்ளோம். கப்பல்களின் சிறப்பம்சம், போர் கப்பல்களின் திறன்கள் குறித்து மக்களிடம் விளக்கினோம்''

- அலோக் பாத் நாகர்,


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பிளாக் அதிகாரி


கப்பலை பார்வையிட்டோர் எண்ணிக்கை :13ம் தேதி 11,700

14ம் தேதி 26,218

15ம் தேதி 33,492

மொத்தம் 71,410


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
16-ஏப்-201814:33:59 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>நம்ம நாட்டிலும் வெளிநாடுகளில் இருப்பதுபோல பாதுகாப்பு பயிற்சி கட்டாயம் என்றுவரனும் அப்போதுதான் ஒழுக்கமான எதிர்காலம் சாத்தியம் ஆவும் ரெண்டுவருஷம் இந்த பயிற்சி பேரால் தான் எல்லோருக்கும் தேசியம் என்ற உணர்வும் தேசபக்தியும் வரும் என்று கூறுவேன் முக்கியமா +2முடிச்சதும் பசங்கள் கட்டாயம் தேச சேவைக்கு வரணும் அருமை நேவி விமானப்படை என்று கட்டாயம் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்யும் உணர்வுபெறவேண்டும் இல்லேன்னா குப்பைத்தொட்டி அரசியவியாதிகளால் பல இளைஞர்கள் நாசம் ஆறாங்க அதேபோல அடுத்தது சினிமா என்ற மாயை அவர்களை நிர்மூலம் ஆகுது பெண்களோ நாகரீகம் என்றபெயரில் திருயுதுங்க சின்னக்குழந்தைகள் கூட அசிங்கமா உடைகள் மாட்டிண்டு திரியுதுங்க அசிங்கமா வயதானவர் எல்லாம் சல்வார்கமீஸ் போட்டுண்டு நிக்குதுங்க ரொம்பவே முடியலேன்னா நைட்டி போட்டுக்கட்டும் ஆனால் வடநாட்டு உடை அவாளுக்கு பொருத்தம் நம்மளுக்கு அசிங்கமாயிருக்கே இதுக்கே என்னை பலரும் சாடுவாளுக

Rate this:
16-ஏப்-201812:17:51 IST Report Abuse

GirijaRameshMitul15-ம் தேதி காவல்துறையினர் சரிவர கூட்டத்தை கவனிக்கவில்லை மக்கள் பெரும் அவதி பொதுமக்கள் கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் கூட்ட நெரிசலில் சிக்கி மிக அவதிப் பட்டது தான் மிச்சம்.

Rate this:
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201810:12:37 IST Report Abuse

P R Srinivasanஇதற்கு எதிராக சீமான், அமீர், திருமுருகன் காந்தி, பாரதிராஜா போன்றவர்கள் ஏன் போராடவில்லை. தமிழகமே தண்ணீருக்காக போராடிக்கொண்டிருக்கும் போது கப்பல் மற்றும் கண்காட்சி தேவையா என்று.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)