புதிய திட்டம் 'ஸ்மார்ட்' சிவகங்கா செயலி அறிமுகம் அதிகாரிகள் இனி போக்கு காட்ட முடியாது | Dinamalar

தமிழ்நாடு

புதிய திட்டம் 'ஸ்மார்ட்' சிவகங்கா செயலி அறிமுகம் அதிகாரிகள் இனி போக்கு காட்ட முடியாது

Added : ஏப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை: அரசு துறைகள் மூலம் ஏராளமான திட்டங்கள் செயலில் உள்ளன. விழிப்புணர்வு இல்லாதது; அதிகாரிகள் மெத்தனத்தால் திட்டங்கள், மானியம் மக்களிடம் சென்றடைவதில்லை.
இதை தடுக்க கலெக்டர் லதா முயற்சியால் மாநிலத்திலேயே முதன் முதலாக சிவகங்கை மாவட்டத்தில் 'ஸ்மார்ட்' சிவகங்கா செயலி உருவாக்கப்பட்டது. இச்செயலியை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை உருவாக்கியது. இது தமிழக அரசின் 'உழவன் ஆப்' ல் இருந்து வேறுபட்டது. திட்ட விபரங்கள் மட்டுமின்றி, வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும்.
இந்த செயலியை 'ஸ்மார்ட் போனில்,' 'பிளே ஸ்டோரில்' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் திட்டங்கள் தமிழில் சுருக்கமாக இருக்கும். சாதாரண மக்கள் கூட வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பத்தில் பெயர், முகவரியை தவிர மற்ற விபரங்களை 'டிக்' செய்தால் போதும். கலெக்டரின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால் அதிகாரிகள் வேண்டுமென்றே விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது.
மனு நிலவரமும் அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம். மனுக்களை தேவையின்றி தாமதப்படுத்த முடியாது. இந்த செயலியில் முதற் கட்டமாக வேளாண்மை, கால்நடை பராமரிப்பு துறைகள் இணைக்கப்பட்டன. மற்ற துறைகள் படிப்படியாக இணைக்கப்படும்.
அறிமுக விழாவில் அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் லதா, ஜெயச்சந்திரன் எஸ்.பி., செந்தில்நாதன் எம்.பி.,-கால்நடை மருத்துவ பல்கலை துணை வேந்தர் பாலச்சந்தர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X