காஷ்மீரில் தொலைந்த சிறுமி பிணமாக மீட்பு | Dinamalar

காஷ்மீரில் தொலைந்த சிறுமி பிணமாக மீட்பு

Added : ஏப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில், மனநிலை பாதிக்கப்பட்ட காணாமல் போன சிறுமி, மர்மமான முறையில் இறந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தின் கதுவாவில், சமீபத்தில் மாயமான சிறுமி, ஏழு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில், மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் இறந்துள்ளார். ஜம்முவில் உள்ள காவல் நிலையத்தில், 10ம் தேதி, 'என் மகளை காணவில்லை' என, அவரது தந்தை புகார் அளித்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மூன்று நாட்களாக தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று, தன் வீடு அருகே உள்ள புதரில் சிறுமிபிணமாகக் கிடப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.மாஜிஸ்திரேட் முன்னி லையில், சிறுமியின் உடலை, மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இருப்பினும், மரணத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை