ஸ்டெர்லைட் போராட்டம் : கலெக்டர் எச்சரிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் போராட்டம் : கலெக்டர் எச்சரிக்கை

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துாத்துக்குடி: 'ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை, திசை திருப்பும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, துாத்துக்குடி மாவட்ட கலெக்டர், வெங்கடேஷ் எச்சரித்துள்ளார். துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, 60 நாட்களை கடந்து போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில், சிலர் வாகனங்களை தாக்குவதும், அச்சமூட்டும் சம்பவங்களில் ஈடுபடுவதுமாக உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலை, 2018 மார்ச் 31க்கு பிறகு இயங்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனிடையே, சில சமூக விரோதிகளால், போராட்டம் திசை திருப்பப்பட்டு, விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்படுவோர் மீது, சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201810:51:21 IST Report Abuse
P R Srinivasan ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதி மக்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்களா என்று கலெக்டர் சொல்லவேண்டும். அதை விடுத்தது அறிக்கை விட கூடாது. அந்த ஆலை செயல்படுவதற்கான உரிமத்தை ரத்து செய்திருக்கிறது தமிழக மாசு கட்டுப்பாடு செயலகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை