நாட்டில் 24 போலி பல்கலைகள்; யு.ஜி.சி., பட்டியல் வெளியீடு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நாட்டில் 24 போலி பல்கலைகள்
யு.ஜி.சி., பட்டியல் வெளியீடு

நாடு முழுவதும் செயல்படும், போலி பல்கலைகளின் பெயர் பட்டியல், பல்கலை மானியக்குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Fake Universities,NAAC, University Grants Commission,போலி பல்கலைகள், யு.ஜி.சி போலி பல்கலைகள் பட்டியல் வெளியீடு, பல்கலை மானியக்குழு இணையதளம், நாக் அமைப்பு, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் கட்டமைப்பு வசதிகள்,  வெளி மாநிலங்களில் கல்வி பயில செல்லும் மாணவர்கள்,  Release of UGC Fake Universities List, University Grants Commission Website, National Assessment and Accreditation Council ,Structures of Universities and Colleges, Students studying in Other states,


கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கான அங்கீகாரம் வழங்குதல், கட்டமைப்பு, ஆராய்ச்சி நிதிகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு மேற்கொள்கிறது. யு.ஜி.சி., கட்டுப்பாட்டில் செயல்படும், 'நாக்' அமைப்பு,

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம், ஆசிரியர்கள் குறித்து ஆய்வு செய்து, சிறப்பு அந்தஸ்தை தருகிறது.

இதுபோன்ற, அங்கீகாரம், அந்தஸ்து, கட்டமைப்பு ஏதும் இல்லாத போலி கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் சேர்க்கையை நடத்துகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தகுதி சான்றிதழ்கள், எந்த வகையிலும் பயனளிக்காது.

இதனால், ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை பணிகள் துவங்கும் முன், போலி பல்கலைகளின் பட்டியலை, யு.ஜி.சி., வெளியிடுவது வழக்கம். தற்போது, நாடு முழுவதும், 24 பல்கலைகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஒரு பல்கலையும் இடம் பெறவில்லை.

Advertisement

டில்லியில் 7 பல்கலைகள், உத்தரபிரதேசத்தில், 8; மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் தலா, 2; பீஹார், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று, இடம் பெற்றுள்ளன. வெளி மாநிலங்களில் கல்வி பயில செல்லும் மாணவர்கள், இப்பட்டியலை கவனித்து செயல்பட வேண்டியது அவசியம்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj Pu - mumbai,இந்தியா
16-ஏப்-201819:43:34 IST Report Abuse

Raj Puபட்டியல் இல்லாத வெறும் செய்தி, ஆனால் இதை நடவடிக்கை எடுக்க முடியாத அதிகாரிகள், மாணவிகளின் கற்பை மற்றும் விலை பேசுகிறார்கள்

Rate this:
sundaram - Kuwait,குவைத்
16-ஏப்-201815:39:35 IST Report Abuse

sundaramகணக்கு போலியா இருக்கப்போவுது. பீஹார்ல ஒண்ணே ஒண்ணு தானா? அங்க இருக்குறது எல்லாமே போலியா இருந்தாலும் ஆச்சர்யப்படமுடியாதுங்கோ.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஏப்-201815:05:52 IST Report Abuse

Endrum Indianஅப்போ நம்ம சட்டசபை, பாராளுமன்றம், கோர்ட் எல்லாம் போலி இல்லை தானே?????சந்தேகமில்லாமல் சொல்லமுடியுமா????

Rate this:
viji - Chennai,இந்தியா
16-ஏப்-201814:40:02 IST Report Abuse

vijiயுஜிசி முதலில் அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகங்கள் எவை என வெளியிட வேண்டும் ....

Rate this:
viji - Chennai,இந்தியா
16-ஏப்-201814:38:16 IST Report Abuse

vijis

Rate this:
Ramesh - chennai,இந்தியா
16-ஏப்-201814:01:26 IST Report Abuse

Rameshபோலி சட்டசபை, பார்லிமென்ட்??

Rate this:
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா
16-ஏப்-201812:14:22 IST Report Abuse

கருப்பட்டி சுப்பையா ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவன் கன்ஹையா குமார் போன்ற Urban Naxal எப்படி பிசினஸ் வகுப்பில் விமானத்தில் இந்தியா முழுதும் பிரயாணம் செய்து, இந்தியா உடையணும்னு சொல்லி கலவரம் செய்து காலத்தை கழிக்கிறார்கள்? பணம் எங்கிருந்து வருகிறது? இந்த Urban Naxalsக்கு பணம் கொடுப்பது காட்டிலிருக்கும் நக்சல்கள். காட்டிலிருப்பவர்கள் யாரையாவது கடத்தி சென்று பணம் பறிப்பது. அந்த பணத்தில் நாட்டிலிருக்கும் நக்சல்கள் வளமாக வாழ்வது. நாட்டில் கலவரம் உண்டு பண்ணுவது காட்டிலிருக்கும் நக்சல்களுக்கு நாட்டிலிருக்கும் நக்சல்கள் பாதுகாப்பு - பொது மக்களிடம், 'அவர்கள் கல்வி அறிவற்றவர்கள். பாவம், அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள்" என்று பாதுகாப்பது, காவல் துறை மற்றும் அரசு நடவடிக்கை எடுக்காமல் பார்த்து கொள்வது, வழக்குகளில் பிரபலமான வழக்கறிஞர்களை கொண்டு வாதாடி காப்பாற்றுவது ஜிஹாதியின் ஹவாலா ஒரு parallel economy. சர்ச்சுகளும் நன்கொடையும் ஒரு parallel economy. நக்சல்கள் ஒரு parallel economy. ஹிந்து மட்டும் வரிகட்டும் mainstream economy.

Rate this:
Madhav - Chennai,இந்தியா
16-ஏப்-201812:58:29 IST Report Abuse

Madhav// பணம் எங்கிருந்து வருகிறது? // உங்க கிட்ட தானே அதிகாரமும், அனைத்து துறைகளும் உள்ளது நாலு வருடமாக இதையெல்லாம் தடுக்காம இன்னும் என்ன பண்ணிக்கொண்டு உள்ளீர்கள். //ஹவாலா ஒரு parallel economy.// இதை கூறி தானே நாட்டில் இருப்பவர்கள் எல்லோரையும் ATM வாசலில் நிறுத்தினீர்கள். உங்கள் பண்மொழிப்பு நடவடிக்கை தோல்வி உற்றால் தீயிட்டு கொளுத்த சொன்னவர் எங்கே?...

Rate this:
sundaram - Kuwait,குவைத்
16-ஏப்-201810:27:41 IST Report Abuse

sundaramஇப்போது மத்திய மந்திரிசபையில் இருக்குறவங்க யாராச்சும் இந்த இருபத்து நாலு பல்கலை கழகங்கள் ல எதுனாச்சும் ஒன்னுல படிச்சுட்டு வந்திருப்பாங்களே.

Rate this:
Krishnamoorthy Venkataraman - Madurai,இந்தியா
16-ஏப்-201814:56:58 IST Report Abuse

Krishnamoorthy Venkataramanபடிச்சுட்டு...என்னங்க சொல்றீங்க. சும்மா டாக்டர் பட்டம் கேட்டா கொடுத்துடப்போறாங்க. இதூக்குப்போய் படிக்கணுமா....

Rate this:
sundaram - Kuwait,குவைத்
16-ஏப்-201818:14:08 IST Report Abuse

sundaramநாம ஒரு பக்கம் டாக்ட்டர் பட்டம் கேட்டு அதுக்காக மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு அப்புறம் போலீசை வச்சு அதை மெதுவா சமாளிக்கப்போக செத்தவன் என் மவன் இல்லைன்னு அப்பனையே சொல்ல வைக்கணுமே....

Rate this:
INDIAN - Chennai,இந்தியா
16-ஏப்-201810:26:21 IST Report Abuse

INDIAN1) அந்த பெயர்களை இங்கே ஏன் வெளியிட வில்லை? 2) அரசு அவற்றை ஏன் இன்னும் மூட வில்லை?

Rate this:
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201810:15:35 IST Report Abuse

P R Srinivasanபோலி ஆவணங்கள், போலி டாக்டர்கள், போலி வாக்குறுதிகள் போல போலி பல்கலைக்கழகங்கள். தமிழக மக்கள் புத்திசாலிகள், போலிகளைக்கண்டு ஏமாற்றவில்லை.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement