காவிரி விவகாரத்தில் அடுத்தது என்ன? தி.மு.க., கூட்டணி இன்று ஆலோசனை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காவிரி விவகாரத்தில் அடுத்தது என்ன?
தி.மு.க., கூட்டணி இன்று ஆலோசனை

காவிரி விவகாரத்தில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள், சென்னையில், இன்று ஆலோசனை நடத்துகின்றன.

காவிரி விவகாரம்,  திமுக கூட்டணி கட்சிகள், காவிரி மேலாண்மை வாரியம், தமிழக அரசியல் கட்சிகள் , உச்சநீதிமன்ற தீர்ப்பு,  காவிரி மீட்பு பயணம், பார்லிமென்டை முற்றுகை போராட்டம், 
DMK, Dravida Munnetra Kazhagam, Cauvery Affairs, DMK Alliance Parties, Cauvery Management Board, Tamil Political Parties, Supreme Court Judgment, Cauvery Recovery Travel,தி.மு.க, திராவிட முன்னேற்றக் கழகம்,


உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்காததை கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ராணுவ கண்காட்சியை துவக்கிவைக்க, ஏப்., 12ல், சென்னை வந்த, பிரதமர் மோடிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கறுப்பு கொடி போராட்டம் நடத்தின.

டெல்டா மாவட்டங்களில், காவிரி மீட்பு பயணத்தை முடித்த, தி.மு.க., செயல் தலைவர்

ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன், ஏப்., 13ல், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, அனைத்து கட்சி தலைவர்கள், பிரதமர் மோடியை சந்தித்து பேச, ஏற்பாடு செய்கிறேன்' என, ஸ்டாலினிடம், கவர்னர் உறுதி அளித்தார்.

இந்நிலையில், இன்று காலை, தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடக்கிறது.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும், மாலை, 5:00 மணிக்கு, சென்னை அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும், ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர், ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர், காதர்மொய்தீன் மற்றும் கம்யூ.,

Advertisement

மாநில செயலர்கள் உட்பட, ஒன்பது கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அப்போது, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில், பிரதமரை சந்தித்து பேச, கவர்னர் அனுமதி பெற்றுத்தராவிட்டால், அடுத்த கட்டமாக, எந்த மாதிரியான போராட்டம் நடத்துவது என, முடிவு எடுக்கப்பட உள்ளது. டில்லியில் மனித சங்கிலி அல்லது பார்லிமென்டை முற்றுகை போராட்டம் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samaniyan - Chennai ,இந்தியா
16-ஏப்-201817:42:58 IST Report Abuse

SamaniyanMarch to Bangalore and demand suspension of IPL there

Rate this:
Thiyagarajan - Bangalore,இந்தியா
16-ஏப்-201815:58:48 IST Report Abuse

Thiyagarajanகூட்டணி கட்சியின் தலைவர் ஒருவரை தீக்குளிக்க வைக்கலாம். தொண்டர்கள் எவ்வளவுகாலம் தான் தீக்குளிப்பார்கள்....

Rate this:
16-ஏப்-201814:51:07 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்அடுத்த ஆபரேஷன் என்ன தலைவரே? அடுத்த ஆபரேஷன் எனக்குத்தான்....... நடிகர் வடிவேலுவை மிஞ்சிவிடுவார்போல.

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X