நடுக்கடலில் மீன்கள் இனி, 'பிசி' : 60 நாள் தடைக்காலம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடுக்கடலில் மீன்கள் இனி, 'பிசி' : 60 நாள் தடைக்காலம் துவக்கம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நடுக்கடலில் மீன்கள் இனி, 'பிசி' : 60 நாள் தடைக்காலம் துவக்கம்

வங்கக்கடலில், மீன்களின் இன விருத்திக்கான, 60 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் நேற்று துவங்கியது. இதனால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன்பிடி துறைமுகங்களில் ஓய்வெடுத்து வருகின்றன. மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் இன விருத்தி கருதி, வங்கக்கடலில், ஆண்டுதோறும், 45 நாட்கள், ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த, 2017 முதல், இந்த தடைக் காலம், 60 நாட்களாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட வங்கக்கடல் பகுதியில், இந்த ஆண்டுக்கான தடைக் காலம், நேற்று அதிகாலை துவங்கியது. இந்தத் தடைக் காலத்தில், விசைப்படகுகள் உட்பட, இயந்திரம் பொருத்திய படகுகள், 60 நாட்களுக்கு, மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்படாது. இதனால், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 1,300 விசைப்படகுகள் உட்பட, தமிழகம் முழுவதும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன் பிடிக்க செல்லாமல், கரைகளில் நிறுத்தப்பட்டு உள்ளன.அதேநேரத்தில், மீன்பிடி தடைக் காலத்தில், பைபர் மற்றும் கட்டுமரங்களில் மட்டுமே மீன்பிடிக்க முடியும். அதில், தேவைக்கேற்ப மீன் கிடைக்காது என்பதால், வழக்கத்தை விட, மீன் வரத்து பெருமளவு குறையும்; மீன்கள் விலை அதிகரிக்கும் என, மீனவர்கள் தெரிவித்துஉள்ளனர்.இந்த தடைக் காலத்தில், மீன்பிடி தொழில் முடங்குவதால், மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மீனவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசு, தலா, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201809:01:18 IST Report Abuse
Srinivasan Kannaiya மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மீனவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசு, தலா, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளது. இதை விட நூறுநாள் திட்டத்தில் இவர்களுக்கு வேலை கொடுக்கலாமே யாரோ அரசியல்வாதி உறவினர்களுக்கு சும்மா உக்காரவைத்து கொடுப்பதை விட... இவர்களிடம் வேலை வாங்கி கொண்டு ஊதியம் கொடுக்கலாமே.,..,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை