பா.ஜ., அமைச்சர்கள் ராஜினாமா ஏற்பு| Dinamalar

பா.ஜ., அமைச்சர்கள் ராஜினாமா ஏற்பு

Added : ஏப் 16, 2018
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பா.ஜ., - அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்பதாக, முதல்வர் மெஹபூபா முப்தி நேற்று அறிவித்தார். ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், 8 வயது சிறுமி, ஒரு கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்தக் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் அதிகாரியை விடுவிக்கக் கோரி, சமீபத்தில் பேரணி நடத்தப்பட்டது. அதில், பா.ஜ.,வைச் சேர்ந்த, வனத்துறை அமைச்சர், சவுத்ரிலால் சிங், தொழில் துறை அமைச்சர் சந்தர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இரு அமைச்சர்களும், தங்கள் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை, முதல்வரிடம் அளித்தனர். அமைச்சர்கள் இருவரின் ராஜினாமாவையும் ஏற்பதாக முதல்வர் மெஹபூபா நேற்று அறிவித்தார்.

Advertisement