'என்கவுன்டரில்' தப்புவது எப்படி? போலீஸ் அதிகாரி பேச்சால் சர்ச்சை| Dinamalar

'என்கவுன்டரில்' தப்புவது எப்படி? போலீஸ் அதிகாரி பேச்சால் சர்ச்சை

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Uttar Pradesh encounter, Lakraaj Yadav,Sunit Kumar Singh,என்கவுன்டரில் தப்புவது எப்படி, போலீஸ் அதிகாரி பேச்சால் சர்ச்சை, உத்தர பிரதேசம், பாரதிய ஜனதா தலைவர்கள், லேக்ராஜ் யாதவ், போலீஸ் அதிகாரி சுனித் குமார் சிங், 
How to get rid of the encounter, police officer controversy,  Bharatiya Janata leaders,  police officer Sunit Kumar Singh,

லக்னோ : உத்தர பிரதேசத்தில், 'என்கவுன்டரில்' இருந்து தப்பிக்க, பா.ஜ., தலைவர்களை, 'கவனிக்கும்படி' மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர், லேக்ராஜ் யாதவ். இவர் மீது, கொலை, கடத்தல் உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது, இவர் ஜாமினில் வெளியே உள்ளார். இவரது அனைத்து நடவடிக்கைகளையும், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த, மூத்த போலீஸ் அதிகாரி, சுனித் குமார் சிங், ஜாமினில் வெளியில் வந்துள்ள, லேக்ராஜ் யாதவுடன், மொபைல் போனில் பேசினார். அப்போது, 'உன் பெயர் என்கவுன்டர் பட்டியலில் உள்ளது. அடுத்து, உன்னைத் தான், என்கவுன்டர் செய்யப் போகின்றனர். இந்த விஷயத்தில், என்னால் உதவி செய்ய முடியாது. 'இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், மாநில, பா.ஜ., தலைவர்களை, 'கவனிக்க' வேண்டும்' என, சுனித் குமார் தெரிவித்து உள்ளார். இந்த உரையாடலை, லேக்ராஜ் பதிவு செய்துள்ளார்.

இதற்கு அடுத்த நாளே, லேக்ராஜ் யாதவை என்கவுன்டர் செய்ய, முயற்சி நடந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த ஆடியோவை வெளியிட்டார். இது, சமூக வலைதளங்களில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, சுனித் குமார் சிங், அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். மேலும், இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்திற்கு, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
16-ஏப்-201814:43:31 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> காசு பணம் மணிமணி என்று பெயாயப்பார்க்குறானுக கஸ்மாலம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஏப்-201812:52:28 IST Report Abuse
தமிழ்வேல் கட்சி கஜானா நிரம்பி வழிந்தும், வரும் தேர்தலுக்கு போதாது போலும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஏப்-201812:46:51 IST Report Abuse
தமிழ்வேல் 60 கேசு இருக்கும் போது இவனுக்கெல்லாம் எவன் ஜாமீன் கொடுக்கிறது ?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஏப்-201812:45:27 IST Report Abuse
தமிழ்வேல் என்ன தப்பு செஞ்சுட்டார் ? நடைமுறையைத்தானே சொன்னார் ? நேரில் சொல்லாமல், போனில் சொன்னதுதான் தப்பு.
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - chennai,இந்தியா
16-ஏப்-201811:47:04 IST Report Abuse
மணிமாறன் மோடிக்கு அடுத்து பிரதமர் ஆவதற்கு முழு தகுதியும் சாமியார் " யோகி " அவர்களுக்கு இருக்கிறது..
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
16-ஏப்-201811:23:37 IST Report Abuse
Syed Syed எப்படியாவது பணம் சம்பாதிக்கணும் .
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
16-ஏப்-201811:20:12 IST Report Abuse
Needhiyin Pakkam Nil எப்படி எப்படி ஆளும் கட்சிக்கு கப்பம் கட்டவில்லை என்றால் அவர்கள் யாரும் கேள்விகேட்க முடியாத அளவிற்கு சட்டப்படி என்கவுன்டர் செய்யப்படுவார்கள், இதற்கு பெயர் தாண்டா அதிகாரவர்க்க ஜனநாயகம் இப்படி தான் இருக்கும், ஏண்டா உண்மைய வெளியில சொன்ன என்று சொல்லி சுனித் குமார் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார், ஆனால் ஆளுங்கட்சிக்காக மக்களை மிரட்டி கப்பம் கேட்கும் உண்மையான குற்றவாளிகளான உயர் அதிகாரிகளை யார் சஸ்பெண்ட் பண்றது, உண்மையை மறைத்து பொய்யை சொல்லி அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் துணை போகும் கைக்கூலிகளுக்கு மட்டும் தான் இந்த நாட்டில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று தோன்றுகிறது, இப்படியே போய் கொண்டிருந்தால் யோக்கியனுக்கு இந்தியாவில் என்னடா வேலை என்று கேட்கும் காலம் வந்து விடும்...........
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-ஏப்-201811:02:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் 'என்கவுன்டரில்' இருந்து தப்பிக்க, பா.ஜ., தலைவர்களை, 'கவனிக்கவும்'.. சிபிஐ இடமிருந்து தப்பிக்க அமீத் சாவை கவனிக்கவும். அடுத்த தேர்தலில் டிக்கெட் தரப்படும். வருமானவரி ரெயிடிலிருந்து தப்பிக்க கிட்னிலீயை கவனிக்கவும். பாங்கு கடன் வாங்கி ஏமாத்தினவர்கள் வெளிநாட்டு விசா, இலவச டிக்கெட் வாங்க சுஷ்மாவை கவனிக்கவும். கிட்னி கொடுத்தால் விரைவாக செய்து தரப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஏப்-201810:45:56 IST Report Abuse
Bhaskaran அவர் ஒன்றும் இல்லாததை சொல்லவில்லையே உண்மையைதான்சொல்லியுள்ளார்
Rate this:
Share this comment
Cancel
Rajasekar - New Delhi,இந்தியா
16-ஏப்-201810:25:40 IST Report Abuse
Rajasekar 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆனால் அவர் ஜாமீனில் உள்ளார்?????? என்ன ஒரு ஓட்டையான சட்டம், உலகில் மிக மோசமான குற்றவாளிகளுக்கு சாதகமான சட்டம் என்றால் அது இந்திய சட்டமாகத்தான் இருக்கும்..... சட்ட மேதைகளுக்கு கோடான கோடி புண்ணியம் கிடைக்கும் ஏனென்றால் தவறு செய்த குற்றவாளிகள் அனைவரும் வாழ்த்துவார்கள்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை