கர்நாடகா தேர்தல்: மகனுக்காக தொகுதி மாறுகிறார் சித்தராமையா| Dinamalar

கர்நாடகா தேர்தல்: மகனுக்காக தொகுதி மாறுகிறார் சித்தராமையா

Updated : ஏப் 16, 2018 | Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Karnataka election, Sitaramayya,Yathindra,கர்நாடக தேர்தல், தொகுதி மாறுகிறார் சித்தராமையா, கர்நாடக சட்டைசபை தேர்தல், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்,  சித்தராமையா மகன் யதீந்திரா, 
சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டி,  யதீந்திரா வருணா தொகுதியில் போட்டி, மே 12-ம் தேதி கர்நாடக தேர்தல், 
 Karnataka Assembly election, Congress candidate list, Siddaramaiah son Yathindra,
Siddaramaiah is contesting from Chamundeshwari constituency, Yatindra Varuna constituency, Karnataka election on May 12,

புதுடில்லி: அடுத்த மாதம் நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டை சபை தேர்தலில் மகனுக்காக தொகுதி மாறுகிறார் மாநில முதல்வர் சித்தராமையா.
கர்நாடக மாநிலத்தில் சட்சபைக்கான தேர்தல் மே 12-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 15ம் தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. இதனையடுத்து 224 தொகுதிகளை கொண்ட தொகுதிகளில் 218 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலில் மாநில முதல்வராக உள்ள சித்தராமையா மற்றும் அவரது மகன் யதீந்திராவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து வருணா தொகுதியில் இருந்து வெற்றி பெற்று வந்த சித்தராமையா இந்த தேர்தலில் தனது சொந்த தொகுதியை தனயனுக்காக தற்போது விட்டு கொடுத்துள்ளார். அவரது மகன் யதீந்திரா தற்போது வருணா தொகுதியில் போட்டியிட உள்ளார். தொடர்ந்து சித்தராமையா மைசூரு மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட உள்ளார். தற்போது உள்ள எம்.எல்ஏக்களில் 14 பேருக்கு சீட் வழங்கப்பட வில்லை. அதே நேரத்தில் காங்., தலைவர்களின் வாரிசுளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கிட்டூர் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா பேசுகையில் பா.ஜ. அலையால் மிரண்டு போன காங். முதல்வர் சித்தராமையா வருணா சட்டசபை தொகுதியில் இருந்து சாண்டீஸ்வரி தொகுதிக்கு ஓட்டமெடுத்துவிட்டார் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.kumaraswamy - Chennai,இந்தியா
16-ஏப்-201816:33:25 IST Report Abuse
s.kumaraswamy எழுபது ஆண்டுகளாக நடத்தி செல்ல நல்ல தலைவர்கள் கிடைக்காமல் ஒரே குடும்பத்தை நம்பி இருக்கின்ற இதெல்லாம் ஒரு கட்சின்னு .வெட்ககேடு..
Rate this:
Share this comment
Cancel
s.kumaraswamy - Chennai,இந்தியா
16-ஏப்-201815:04:49 IST Report Abuse
s.kumaraswamy இத்தனை பெரிய கட்சி இத்தனை கோடி மக்கள் ஆதரவு... என்னடா புரூடா விடறீங்க.... அந்த குடும்பத்த தவிர தலைமைக்கு கூட எவனும் கிடைக்கல வொங்க கட்சியிலே அறுபது வருடமா...
Rate this:
Share this comment
Cancel
s.kumaraswamy - Chennai,இந்தியா
16-ஏப்-201813:25:52 IST Report Abuse
s.kumaraswamy ஆந்திராவுக்கு கொள்ளை அடிக்க என்.டி.ஆர் பேமிலி.. .தமிழ் நாட்டில் கொள்ளை அடிக்க கருணா பேமிலி... உபியில் கொள்ளை அடிக்க முலாயம் பேமிலி... பீகாரில் கொள்ளை அடிக்க லல்லு பேமிலி... மொத்த இந்தியாவில் கொள்ளை அடிக்க நேரு பேமிலி... இப்ப கர்நாடகவில் கொள்ளை அடிக்க சித்தா பேமிலி... மொத்தத்தில் நாட்டு மக்கள் நாதியற்று நரக வாழ்க்கையில் வதங்கட்டும்...
Rate this:
Share this comment
Cancel
s.kumaraswamy - Chennai,இந்தியா
16-ஏப்-201813:17:01 IST Report Abuse
s.kumaraswamy மகன்கள் மகள்கள் பேரன்கள் சுயநலவாதி காங்கிரஸ் கூட்டங்கள் மக்கள் நலன்களை பற்றி எதற்கு கவலைப்பட போகிறது... மத்தியிலும் பாட்டி அப்பா மகன் என்று ஒரு சுயநல கும்பல்...இதெல்லாம் ஜனநாயக கட்சியா...கட்சியில் இல்லாத ஜனநாயகத்தை இவர்கள் எப்படி ஆட்சியில் கொண்டு வருவார்கள்... மக்களுக்கு எப்படி நல்லது செய்வார்கள். இதெல்லாம் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
16-ஏப்-201812:18:09 IST Report Abuse
adalarasan தந்தை,மகன், இருவரையும் மக்கள் வீட்டிற்கு, அனுப்புவார்கள் சட்டத்தை மதிக்காத. ஜாதி, வெறியை தூண்டி, இன,வெறியை தூண்டும் இவர், தோக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
16-ஏப்-201811:25:17 IST Report Abuse
ganapati sb சித்தராமையா போல மேலும் ஐந்தாறு மந்திரிகளின் வாரிசுகளுக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளதாம் . கான் க்ராஸையும் வாரிசு அரசியலையும் பிரிக்கவே முடியாது .
Rate this:
Share this comment
Cancel
ganesan b(ganesh) - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201811:11:08 IST Report Abuse
ganesan b(ganesh) எப்பதான் குடும்ப அரசியல் மாறப்போகிறதோ தமிழ்நாட்டில் திமுக தொடங்கி வைத்தது.எல்லா மாநிலத்திலும் பரவுகின்றன. வருத்தப்படவும் கவலைப்படவும் வேண்டிய விஷயம் .
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-ஏப்-201810:49:25 IST Report Abuse
இந்தியன் kumar கர்நாடகாவில் லஞ்சம் ஓவர் ,அதுவும் போக்குவரத்து துறையில் எவ்வளவு லோடுவேனாலும் ஏற்றி செல்லலாம் எக்ஸ்ட்ரா 1ட ன்னுக்கு 100 ருபாய் மாமூல் 10 டன் என்றால் 1000 ருபாய் இது அல்லாமல் டயர் கணக்கில் லஞ்சம் வாங்கப்படுகிறது , அரசு வரை மாமூல் செல்கிறது இத்தைகைய காங்கிரஸ் அரசு நீடிக்க வேண்டுமா ??? காங்கிரஸ் என்றாலேய ஊழல் ஊழல் தான் .
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஏப்-201809:05:54 IST Report Abuse
Bhaskaran இவரும் ராஜசேகர ரெட்டிபோல் போலி மதசார்பின்மை பேசிக்கொண்டு பலம் போன காங்கிரஸ் கட்சிக்கு திருப்பதி கோவிலில் இருந்து நிதிகளை அள்ளிவிட்டு கட்சியை தன் கண்ட்ரோல் வைத்துக் கொண்டதைப்போல் கர்நாடக கோவில் மற்றும் மடத்து நிதிகளை கட்சிக்கு தேர்தல் நிதியாக தருவாரா என்னமோ அப்படி செய்தால் ரெட்டி கதிதான் இவருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201808:06:53 IST Report Abuse
Srinivasan Kannaiya நீங்களும் உங்கள் மகனும் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை இதை விட வேறு முறையில் சிம்பாலிக்காக சொல்லமுடியாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை