ராமமோகன ராவ் கூறியது உண்மைக்கு புறம்பானது:கோவையில் முதல்வர் பழனிசாமி பேட்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராமமோகன ராவ் கூறியது உண்மைக்கு புறம்பானது:கோவையில் முதல்வர் பழனிசாமி பேட்டி

Added : ஏப் 16, 2018
Advertisement

கோவை:''ஜெ., விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் கூறியது, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.கோவை விமான நிலையத்தில், முதல்வர் பழனிசாமி கூறியதாவது:காவிரி மேலாண்மை வாரியம் குறித்து, பிரதமரிடம் மனு தான் கொடுக்க முடியும். 'ட்விட்டர்', 'பேஸ்புக்' கில் இதை அணுக முடியாது.
இது சட்ட ரீதியாக அணுக வேண்டிய விஷயம். பிரதமருக்கு முதல்வர் சார்பில், கோரிக்கை வைக்கும் போது அதை விண்ணப்பம் மூலமாக தான் கொடுக்க முடியும். அது தான் ஆதாரம். ஜெ., பிறந்த நாள் விழாவின்போது பிரதமர் மோடியிடம் இதுகுறித்து வலியுறுத்தினோம். தமிழகத்தின் உரிமைகளை உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கொடுத்திருக்கிறது. இப்போது அளித்திருக்கும் மனுவில், அதை செயல்படுத்த வேண்டும் என, குறிப்பிட்டுள்ளோம்.
மே 3க்குள் வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என, உச்சநீதிமன்ற உத்தரவு இருக்கும் போது கற்பனை கேள்விகளுக்கு பதில் கூற முடியாது. கடந்த 2013ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை அ.தி.மு.க., அரசு தான் மூடியது. அ.தி.மு.க., பணம் வாங்கியிருந்தால் ஆலையை மூட முடியுமா? அ.தி.மு.க., அரசு தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. ஜெ., விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் கூறியது, யாரையோ தப்பிக்க வைக்கவே தவிர, அது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு. இவ்வாறு, முதல்வர் பழனிசாமி கூறினார்.

Advertisement