காங்கிரசை விலக்கி வைப்பீர்களா?தி.மு.க.,வுக்கு அமைச்சர் கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்கிரசை விலக்கி வைப்பீர்களா?தி.மு.க.,வுக்கு அமைச்சர் கேள்வி

Added : ஏப் 16, 2018
Advertisement

கோவை:''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடாமல் தடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், காங்., கட்சியை கூட்டணியில் இருந்து விலக்கி வைப்பாரா,'' என்று அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை காந்திபுரத்தில், அரசு பொருட்காட்சியை அமைச்சர் வேலுமணி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் திறந்து வைத்தனர். பின், அமைச்சர் வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:காவிரி பிரச்னையில் துரோகம் செய்ததது தி.மு.க., தான் என்பது மக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் தெரியும்.
அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்த்து, முதல்வர் ஆவதை ஸ்டாலின் நோக்கமாக கொண்டுள்ளார்.காவிரி பிரச்னைக்காக காங்., கட்சியை உடன் வைத்து கொண்டு தி.மு.க., போராட்டம் நடத்துவது சரியானது தானா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடாமல் தடுக்கும் கர்நாடக காங்கிரசை கண்டித்து, ஸ்டாலின் தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரசை விலக்கி வைப்பாரா?முதல்வர் ஜெ., மரணம் தொடர்பாக, முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் யாரை திருப்திபடுத்தப் பேசுகிறார் என தெரியவில்லை. அவரை விசாரணை ஆணையம், தீவிரமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு, அமைச்சர் வேலுமணி கூறினார்.

Advertisement