காவிரி பிரச்னையில் துரோகம்: இ.கம்யூ., ராஜா குற்றச்சாட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவிரி பிரச்னையில் துரோகம்: இ.கம்யூ., ராஜா குற்றச்சாட்டு

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement

திருப்பூர்:''காவிரி நதிநீர் பிரச்னையில், மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனை காப்பாற்றவில்லை,'' என, இந்திய கம்யூ., தேசிய செயலாளர் ராஜா கூறினார்.திருப்பூரில் ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:ஆறு வாரத்தை மவுனமாக கழித்த மத்திய அரசு, கடைசி நாளில் நீதிமன்றத்தை அணுகியது. உத்தரவை நிறைவேற்ற நீதிமன்றம் அறிவுறுத்தியது. மத்திய அரசு, உத்தரவை நிறைவேற்றுவதாக இல்லை. காவிரி பிரச்னையில், மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது.தமிழக அரசும், மாநில நலனை காப்பாற்ற தவறிவிட்டது. மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பல்வேறு கட்சிகள் முயன்ற போது, அ.தி.மு.க., என்ன செய்தது? தன்னை அதிகாரம் மிக்கதாக தமிழக அரசு கருதவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement