தெலுங்கானா: வாரிசுகளுக்கு சீட் பெற தலைவர்கள் தீவிரம்| Dinamalar

தெலுங்கானா: வாரிசுகளுக்கு சீட் பெற தலைவர்கள் தீவிரம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (6)
Advertisement
Telangana Assembly election, Chandrasekhara Rao,Telangana ministers ,தெலுங்கானா மாநிலம், தெலுங்கானா சட்ட சபை தேர்தல்,  தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி,முதல்வர் சந்திரசேகரராவ் , பார்லிமென்ட் தேர்தல் 2019, தெலுங்கானா அமைச்சர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு, தெலுங்கானா எம்.எல்.ஏக்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு, 
Telangana state, Telangana legislative election, Telangana Rashtra Samithi Party, Chief Minister Chandrasekara Rao, Parliamentary Elections 2019,  Telangana MLAs,

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் சட்ட சபை தேர்தலில் போட்டியிட தங்களின் வாரிசுகளுக்கு சீட் பெறுவதில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருங்கிணைந்த ஆந்தராவில் இருந்து பிரிந்து கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி தெலுங்கானா மாநிலம் உருவானது. புதிய மாநிலத்தின் முதல்வராக தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவராக சந்திரசேகரராவ் பதவியில் இருந்து வருகிறார். வரும் 2019-ம் ஆண்டில் மாநில சட்டசபைக்கு பொது தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக மாநிலத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு பெற வேண்டியும், மீண்டும் தாங்கேளே போட்டியிடுவற்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தற்போதே மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக மாவட்டங்களில் தங்களின் வாரிசுகளை களம் இறக்கிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் சில அமைச்சர்கள் வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு தேசிய அரசியலில் காலூன்ற ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement