திண்டுக்கல் ரயில்வே முன்பதிவு கவுன்டரை மூட எதிர்ப்பு நேரத்தை குறைப்பதால் பயணிகள் அதிருப்தி| Dinamalar

தமிழ்நாடு

திண்டுக்கல் ரயில்வே முன்பதிவு கவுன்டரை மூட எதிர்ப்பு நேரத்தை குறைப்பதால் பயணிகள் அதிருப்தி

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் வரும் திங்கட்கிழமை முதல் ஒரு முன்பதிவு கவுன்டரை மூடவும், முன்பதிவு செய்யும் நேரத்தையும் குறைக்கும் திட்டத்திற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வழியே தினமும் 120 க்கும் மேற்பட்ட முறை ரயில்கள் வந்து செல்கின்றன. தென் மாவட்டங்களின் மையமாக திண்டுக்கல் உள்ளது. திண்டுக்கல், தேனி மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.திண்டுக்கல் சந்திப்பு ஸ்டேஷனில் 2 முன்பதிவு கவுன்டர்கள் செயல்பட்டு வருகிறது. அதில் சுழற்சி முறையில் 6 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்பதிவு டிக்கெட்டுகள் மூலம் தினமும் ரூ.2 லட்சம் வருவாய் கிடைத்து வருகிறது.
ஆன்லைன் வசதி வந்த பிறகு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைந்தாலும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சுற்றுலா, ராணுவ வீரர்கள், காவல்துறையினர் போன்றோர் மொத்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல், குழந்தைகளுக்கு அரை டிக்கெட் வாங்கும் வசதி ஆன்லைனில் கிடையாது. எனவே இத்தரப்பினரும், ஆன்லைன் வசதியை கையாள தெரியாதோரும் நேரில் வந்து பதிவு செய்வர்.
கவுன்டரை மூட எதிர்ப்பு
இந்நிலையில் முன்பதிவு கவுன்டரில் ஒன்றை வரும் திங்கட்கிழமை முதல் மூடவும், முன்பதிவு நேரத்தை காலை 8:00 முதல் 12:00 வரை, மதியம் 2:30 முதல் 6:30 வரை மாற்றவும், முன்பதிவு பணியாளர்களை முன்பதிவற்ற டிக்கெட்டுகளை வழங்கும் பணிக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளனர். (தற்போது காலை 8:௦௦ முதல் மதியம் 2:௦௦ மணி, மதியம் 2:௦௦ முதல் இரவு 8:௦௦ மணி, இரவு 8:௦௦ முதல் நள்ளிரவு 12:௦௦ மணிவரை முன்பதிவு நேரம் உள்ளது குறிப்பிடத்தக்கது).
மதுரைக்கு அடுத்து அதிக பயணிகள் வந்து செல்லும் இடம் திண்டுக்கல் சந்திப்பு. இங்கு பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் கவுன்டரை மூடினால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்படும். பஸ்களில் அதிகரித்துள்ள கட்டணத்தால், வழக்கத்தை விட 50 சதவீதம் பேர் கூடுதலாக ரயிலில் பயணம் செய்ய துவங்கியுள்ளனர். முன்பதிவு கவுண்டரை மூடினால், இந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்படுவர். கிடைக்கும் வருவாயிலும் இழப்பு ஏற்படும்.
பயணி ஒருவர் கூறுகையில்,' எல்லோரும் ஆன்லைனில் முன்பதிவு செய்வதில்லை. பலரும் நேரில் வந்து முன்பதிவுக்கு விண்ணப்பிக்கின்றனர். முன்பதிவு கவுன்டரை மூடாமல், கூடுதல் கவுண்டர் திறக்க வேண்டும். பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
16-ஏப்-201808:33:50 IST Report Abuse
R Hariharan கவுண்டர் மூடுவதை நான் எதிரிக்கிறேன். ரயில்வே ஆள் குறைப்பு செய்வதற்கு கவுண்டர் மூடப்படுவதாக தோன்றுகிறது. பொது மக்கள் நலன் கருதி கவுண்டர் பதிவியு போல் இயங்க வேண்டும். Nandri
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X