காவிரி பிரச்னைக்கு போராட்டம்: கட்சி சார்பற்ற விவசாயிகள் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி பிரச்னைக்கு போராட்டம்: கட்சி சார்பற்ற விவசாயிகள் முடிவு

Added : ஏப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்:காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை, ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதென, விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.அவிநாசி அருகே தெக்கலுாரில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாநில தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். தற்போதைய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 'டோல்கேட்'டில்,அதிக வரி வசூலிக்கப்படுவதால், அனைத்து தரப்பினரும் பாதிக்கின்றனர்.
எனவே, 'டோல்கோட்' அருகே, 20 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் மக்கள், கட்டணமின்றி அவ்வழியாக சென்றுவர அனுமதிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலைத்துறை பிரதிநிதிகளுடன் பேசி, தீர்வுகாண முன்வர வேண்டும்.கட்டணமில்லாமல் கடந்து செல்லும் உடன்படிக்கை ஏற்படாதபட்சத்தில், மே, 10ம் தேதி, சுங்கச்சாவடி இடங்களை மீட்டெடுக்க போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அன்றைய தினம், சுங்கச்சாவடியில் உழவு செய்து விவசாயம் செய்யும் போராட்டத்தை நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை, சுங்கச்சாவடிகளில், வரி கொடுக்காமல், ஒத்துழையாமை இயக்கமும் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை