கடும் வறட்சியில் 153 மாவட்டங்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கடும் வறட்சியில் 153 மாவட்டங்கள்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கோடை காலம், கடும் வறட்சி, இந்திய வானிலை மையம், தண்ணீர் பஞ்சம்,  நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம், நாட்டின் பல பகுதிகளில் கடும் வறட்சி, 
The summer season, severe drought, Indian Meteorological Center,
Water famine, water famine in many areas of the country, severe drought in many areas of the country,

புதுடில்லி : கோடை காலத்தின் துவக்கத்திலேயே நாட்டில் உள்ள 153 மாவட்டங்கள் கடுமையான வறட்சிக்கு உள்ளாகி உள்ளதாக இந்திய வானிலை மைய புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

2017 அக்டோபர் முதல் 2018 மார்ச் வரை 140 மாவட்டங்கள் மழை இல்லாததால் மிக கடுமையாக வறண்டுள்ளன. மற்ற 109 மாவட்டங்கள் பாதியளவும், 156 மாவட்டங்கள் சிறிதளவும் வறண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நாடு முழுவதும் உள்ள 153 மாவட்டங்கள் கடுமையான வறட்சியை சந்தித்து வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் கோடையில் நாட்டின் பல பகுதிகள் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்க வேண்டியாக இருந்தாலும், இந்த ஆண்டு மழைக்காலத்தின் போது பல பகுதிகளில் மழை இல்லை. இதனால் கோடையில் அப்பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
16-ஏப்-201814:51:07 IST Report Abuse
balakrishnan கோடை காலத்தின் துவக்கத்திலேயே வறட்சி பயமுறுத்துகிறது, அரசு எந்த அளவுக்கு முன்னேற்பாடு செய்திருக்கிறது என்று தெரியவில்லை, கவர்ச்சிகரமான பேச்சும், வசீகர விளம்பரமும் தீர்வு ஆகாது
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
16-ஏப்-201813:55:45 IST Report Abuse
பிரபு தலைப்பை பார்த்தவுடன் 'அரசியல் கட்சி மாவட்டங்கள்' (மாவட்ட நிர்வாகிகள்) தான் வறட்சியில் இருக்காங்களோ-ன்னு நெனைச்சிட்டேன். அவங்க எல்லாம் செழிப்பாத்தான் இருக்கிறாங்க.
Rate this:
Share this comment
Cancel
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
16-ஏப்-201813:36:19 IST Report Abuse
Amar Akbar Antony சில வருடங்கள் முன்பு கருவேல மரத்தை வெட்டினோம் நீர் உறிஞ்சிகிறதென்று :குளிர்பானத்திர்காக நிலத்தடி நீரை உறிஞ்சிகிறோம்? வீடுகட்டுவதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகிலெல்லாம் மனை பிரித்தோம்: சாலை விரிவாக்கம் என்றும் மரங்களை வெட்டினோம்: கால்வாய்கள் அருகிலும் கண்மாய் அருகிலும்:ஆற்றின் அருகிலும் நீரின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தோம்:ஓட்டுக்காக அவர்களை அனுமதித்தோம்: மணல் அள்ளியபோது டிரைவர் உட்பட கண்மூடியிருந்தோம்: மலைகளில் போதை பொருட்களுக்காக மலையே எரித்தார்கள்: இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்: மக்கள் தொகையை கூட்டிவிட்டு இயற்கை வளங்களை அழித்தோம்:மழை வருமா என்று காத்திருந்து செய்த தவறினை மறக்கிறோம்: இனியாவது வீட்டிற்கு மூன்று மழை தரும் மரத்தை பேணுவோம்: அடுத்தவனை குற்றம் கூறாமல் நாம் நமது நாட்டின் வளங்களை காப்பற்றுவோம்: அரசியலை நம்பி பயனில்லை: நமக்கு நாமே உதவிசெய்வோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X