கடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு அதிகாரிகள் கடிதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு அதிகாரிகள் கடிதம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (185)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பலாத்கார சம்பவங்கள், பிரதமர் மோடி, ஓய்வுபெற்ற சிவில் துறை அதிகாரிகள் கடிதம், காஷ்மீர் சிறுமி பலாத்காரம்,  8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் , மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து அரசு தவறி விட்டது,  அரசியல் கட்சிகள், 
Prime Minister Modi, retired civil department officials, Kashmir girl rape, 8 year old girl rape,
The government has failed to protect people, rape cases, political parties,

புதுடில்லி : காஷ்மீர் மற்றும் உ.பி., பலாத்கார சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர். இந்நிலையில் ஓய்வுபெற்ற சிவில் துறை அதிகாரிகள் 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.

அதில், "மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து அரசு தவறி விட்டது. நமது அரசியலமைப்பில் உள்ள மதசார்பின்மை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவை சரிவடைந்துள்ளன. 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது நாம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது.
சுதந்திரத்திற்கு பிறகு இது இருள் சூழ்ந்த நேரம். இதற்கு நமது அரசும், அரசியல் கட்சிகளுமே பொறுப்பேற்க வேண்டும். அரசு தனது கடமையை செய்ய தவறி விட்டது என்பதையே இது காட்டுகிறது". இவ்வாறு அந்த கடிதத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (185)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
21-ஏப்-201820:52:12 IST Report Abuse
rajan.  இங்கு கேள்வியே அரசு எனும் எந்திரத்தை இயக்குவது யார்? அரசு சார்ந்த ஊழியர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் தானே. இந்த வர்க்கத்தில் எத்தனை பேர் நேர்மையான அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் எனும் கணக்கு பார்த்தால் மிக குறைவு தான் என்பது தெளிவான உண்மை. மக்கள் பிரதிநிதிகளை எத்தனை கிரிமினல்கள் மக்களால் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்கள் கட்சிகளால் இந்த கிரிமினல்களுக்கு தேர்தல் சீட் கொடுக்க பட்டது. மொத்தத்தில் சமூக பொறுப்புணர்வு மக்களுக்கும் அரசு சார்ந்த ஊழியர் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை இங்கு பற்றா குறை. அப்புறம் எங்க உருப்படுமாம்?? சும்மா கடிதம் எழுதி விட்டால் பொறுப்புகள் எங்கே போயி முட்டிக்குமாம் குட்டிசுவற்றிலே போயி எதோ முட்டின கதைதான் திரும்ப திரும்ப வரும். தனிமனித ஒழுக்க கேடு சமுதாய ஒழுக்க கேட்டிற்கு தானே வழிவகுக்கும். எல்லாவனும் நம்ம ஊர் தலைவன் போலா கோடியாதிபதிகளாவனும்னுல்ல சுத்தி அடிக்கிறாங்க டாஸ்மாக்கில்.
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
21-ஏப்-201808:39:23 IST Report Abuse
Ramaswamy Sundaram அதெல்லாம் இருக்கட்டுங்க....ஆளுநர் கன்னத்தில தட்டினாரா இல்லியா? ஏம்பா....கன்னத்தில தட்டினியா? என்ன கன்னத்துல தட்டினியா? நீ ஒரு பொண்ணோட கன்னத்தில தட்டினியாப்பா? என்ன கன்னத்தில தட்டினியா? இப்படியே கடைசியில் ஆளுநர் டென்ஷன் ஆகி மயங்கி கீழே விழுகிறார்
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
21-ஏப்-201808:34:22 IST Report Abuse
Ramaswamy Sundaram கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு...ஜி க்கு சென்ற இடமெல்லாம் ஆப்பு....ஆப்கி பாத் மோடி சர்க்கார்...இப்போ ஆப்பு வாங்குவதும் மோடி சர்க்கார்...தன்வினை தன்னை சுடும் ஒட்டப்பம் வீட்டை சுடும் காவிரியில் செய்த துரோகம் சும்மா விடுமா ? இத்தனைக்கு பிறகும் ஜி க்கு வக்காலத்து வாங்குதுங்க சில வீணா போணதுங்க...காங்கிரஸ் கபோதிகளும் நாதாரி திருட்டு கழகமும் கூடி கும்மி அடிச்சானுங்க என்பதில் சந்தேகமே இல்லை...ஆனா அவனுங்க அயோக்கியத்தனம் பண்ணினானுங்க அப்படின்னு தானே ஜி யை கொண்டு வந்து வச்சோம்? அவரும் எதையோ பண்ணா என்ன பண்றது> ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X