சென்னை : உடல் நலம் பாதிக்கப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
கோயில் யானை ராஜேஸ்வரி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தது. இந்த யானையை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. யானைக்கு இதுவரை அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட சென்னை ஐகோர்ட், யானையை கருணை கொலை செய்ய அனுமதி அளித்துள்ளது.
மேலும், யானையை பரிசோதித்து 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு விதிகளுக்கு உட்பட்ட கருணை கொலை செய்யும் நடைமுறைகளை பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.