8 பேரிடம் சசி தரப்பு குறுக்கு விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

8 பேரிடம் சசி தரப்பு குறுக்கு விசாரணை

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை : ஜெ., மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன் சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், அரசு மருத்துவர் சுதா சேஷையன், அப்பல்லோ மருத்துவர் சத்யபாமா, அரசு மருத்துவர் சுவாமிநாதன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்ரமணன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன், போயஸ் இல்ல சமையலர் ராஜம்மாள் உள்ளிட்ட 8 பேர் இன்றைய குறுக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.

இதனையடுத்து அப்பல்லோ மருத்துவர் சத்யபாமா தவிர்த்து மீதமுள்ள ஏழு பேரும் இன்றைய விசாரணைக்கு ஆஜராகினர். இவர்களிடம் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

Advertisement