கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய காங்.,| Dinamalar

கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய காங்.,

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (7)
Advertisement
கர்நாடகா, காங்கிரஸ், அலுவலகம், தொண்டர்கள், சட்டசபை தேர்தல்

பெங்களூரு : கர்நாடக மாநிலம் மாண்டியாவில் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கட்சி அலுவலகத்தை தாங்களே அடித்து நொறுக்கி சூறையாடினர்.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள், வேட்பாளர்களை தேர்வு செய்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள், மாண்டியாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

Advertisement