குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜினாமா| Dinamalar

குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜினாமா

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (11)
Advertisement
குண்டுவெடிப்பு, வழக்கு, தீர்ப்பளித்த, நீதிபதி, ராஜினாமா

ஐதராபாத்: ஐதராபாத் சார்மினார் அருகே ஒரு மசூதியில் 2007-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 9 பேர் பலியாயினர். 59 பேர் காயமடைந்தனர். இது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது. நீதிபதி ரவீந்தர் ரெட்டி இன்று விசாரணை நடத்தினார். அப்போது போதிய ஆதாரம் இல்லை என்பதால் குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து இன்று காலை தீர்ப்பளித்தார். இந்நிலையில் இன்று நீதிபதி ரவீந்தர் ரெட்டி தனது பதவியை திடீரெ ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

Advertisement